ஞாயிறு, 30 ஜனவரி, 2011

ஒபாமாவின் பிறப்பு சான்றிதழ்

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்தநாட்டை சேர்ந்தவர்? எந்த மதத்தை சேர்ந்தவர் என்ற சர்ச்சை நிலவி வருகிறது. இவர் இந்தோனேசியாவில் பிறந்தவர். அவர் கிறிஸ்தவர் அல்ல. எனவே அவர் அமெரிக்க ஜனாதிபதி பதவி வகிக்க தகுதியற்றவர் என்பன போன்ற விவாதங்கள் அமெரிக்க மக்களிடையே நிலவி வந்தது.

இதுகுறித்த கருத்துக்களை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மறுத்து வந்தது. இருந்தும் அந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சியின் அரசு பிறப்பு சான்றிதழ் பெறும் சட்டத்தில் இருந்த சில தடைகளை நீக்கியுள்ளது. முன்பு சம்பந்தப்பட்டவரோ, அல்லது அவரது குடும்பத்தினரோ ஆவணங்களை தாக்கல் செய்து பிறப்பு சான்றிதழை பெற முடியும்.

தற்போது யார் வேண்டுமானாலும் மற்றவர் பிறப்பு சான்றிதழை சில நிபந்தனைகளுடன் பெற முடியும். அதைத்தொடர்ந்து அதிபர் ஒபாமாவின் பிறப்பு சான்றிதழ் பொதுமக்களால் மிக எளிதாக பெறப்பட்டுள்ளது. அந்த சான்றிதழ் அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் ஒருபிரதி தலா ரூ.4500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்மூலம் அதிபர் ஒபாமா அமெரிக்காவில் உள்ள ஹவாயில் பிறந்தவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இதன்மூலம் ஒபாமா குறித்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல