புதன், 19 ஜனவரி, 2011

துபாய் நகரில் 4 வயது இந்திய சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாய் நகரில் உள்ளது மாடர்ன் உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கூடத்தில் 4 வயதேயான இந்திய சிறுமி ஒருத்தி படித்து வந்தாள். சம்பவத்தன்று பள்ளிக்கூடத்தில் சிறுவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

அப்போது அந்த சிறுமி பள்ளிக்கூடத்துக்கு பஸ்சில் வந்தாள். அவளை பஸ் டிரைவரும், பஸ் கண்டக்டரும், இன்னொருவரும் சேர்ந்து (அனைவரும் இந்தியர்கள்) பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் அவளது உடையில் ரத்தக்கறை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அந்த சிறுமி தன் வீட்டில் தெரிவிக்கவில்லை. ஆனால் அவள் ரொம்பவும் பயந்து போய் இருந்ததால், தூங்க முடியாமல் தவித்தாள். பயந்து போய் சத்தம் போட்டாள். இதை வைத்தும், உடையில் இருந்த கறையை வைத்தும் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவளை விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்தது.

இதை தொடர்ந்து பெற்றோர் பள்ளிக்கூடத்தில் புகார் செய்தனர். பள்ளிக்கூட நிர்வாகம் இதுகுறித்து போலீசில் புகார் செய்தது. இதை தொடர்ந்து இந்தியர்களான டிரைவர், கண்டக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல