வெள்ளி, 7 ஜனவரி, 2011

மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம் (படங்கள் இணைப்பு)

200 அடி பள்ளத்தாக்கில் எப்போதும் விழலாம் என்ற நிலையில் தலைகீழாக ஊசலாடிக் கொண்டிருந்த லொறியொன்றிலிருந்து லொறி சாரதி மயிரிழை யில் உயிர் தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

பாலமொன்றில் பயணம் செய்த குறிப்பிட்ட லொறியானது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவருக்கு மேலாக வீசப்பட்டுள்ளது.
எனினும் லொறியின் சேதமடைந்த உலோகப் பகுதியொன்று பாலத்தின் கொங்கிறீட் தடுப்புச் சுவரில் சிக்கிக் கொண்டதால் லொறி தலைகீழாக அந்தரத்தில் ஊசலாடியது.

இந்நிலையில் லொறியில் வாழ்வா சாவா என்ற நிலையில் போராடிக் கொண்டிருந்த சாரதியை மீட்புப் பணியாளர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் மீட்டுள்ளனர்.

சாரதி மீட்கப்பட்டு சில நிமிடங்களில் லொறி பள்ளத்தில் விழுந்து சிதறியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல