வெள்ளி, 7 ஜனவரி, 2011

விடுதலைப் புலிகளுக்காக ஐக்கிய தேசிய கட்சி நோர்வேயிடம் உதவி கோரியது

2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலிகளின் குரல் வானொலி சேவைக்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய ​நோர்வேயிடம் ஐக்கிய தேசிய கட்சி அரசு உதவி கோரியிருந்ததாக மற்றுமொரு விக்கிலீக்‌ஸ் தகவலை ஓஸ்லோவை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அந்த விக்கிலீக்ஸ் தகவலில் ஐக்கிய அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளதாவது, நோர்வே சமாதான நடவடிக்கைகளுக்காக இலங்கையின் வேண்டுகோளை கருத்திற் கொண்டு இலங்கை சமாதான செயலாளருக்கு உபகரணங்களை வழங்க சம்மதித்தாகவும், விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக வழங்க சம்மதிக்கவில்லை எனவும் நோர்வே தூதுவர் தனக்கு தெரிவித்துள்ளார். ஊடகங்களில் விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசு உதவி செய்தது எனக் கூறப்படுவது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த உபகரணம் கொழும்பு துறைமுகத்திற்கு நோர்வேயின் இறக்குமதி என்பதால் வரிகளின்றி கொண்டுவரப்பட்டு, சமாதான செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பின்பு பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் கைமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்ட உபகரணம் சிங்கபூரில் தயாரிக்கப்பட்ட உபகரணம் எனவும், அதன் மதிப்பு 90 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல