வியாழன், 6 ஜனவரி, 2011

ஜனாதிபதியின் தங்கச்சிலை மீண்டும் உருக்கப்பட்டது

தங்கத்தினால் செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவச்சிலை ஜோதிடர் ஒருவர் கூறியுள்ள ஆலோசனையின் பிரகாரம் நேற்று முன்தினம் மீண்டும் உருக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாம் உயிரோடு இருக்கும் போதே, தங்கத்தில் சிலை செய்வது சிறந்தது இல்லை என ஜோதிடர் ஒருவர் ஜனாதிபதிக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற ஆபரணக் கண்காட்சியாக அவரது தங்க உருவச்சிலை கொழும்பில் பிரபல ஆபரண நிலையம் ஒன்றினால் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் இது உருவாக்கப்பட்டது.

எனினும் ஜோதிடரின் கருத்தின் அடிப்படையில் இதனை மீண்டும் உருக்கியதுடன், இதனை உருவாக்கும் யோசனையை முன்வைத்த இரத்தின மற்றும் ஆபரண அதிகார சபையின் ஆணையாளர் திஸ்ஸ கொத்வத்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல