வியாழன், 6 ஜனவரி, 2011

சர்வதேச நிறுவனத்தை சீண்டிப்பார்த்த கைகளுக்கு விலங்கு

உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியின் உறவினர் ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என அடையாளம் காட்டப்பட்ட சந்தேக நபரினை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டீ அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன் இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது குறிப்பிட்ட சந்தேக நபரை உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியின் உறவினர் அடையாளம் காட்டியுள்ளார்.

இதேவேளை இது போன்ற சம்பவங்களால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் சந்தேக நபரை கைது செய்த வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இராஜகிரியவில் அமைந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியின் வீட்டில் இருந்த அவரது உறவினர் ஒருடன் குறிப்பிட்ட சந்தேக நபர் தகாத முறையில் ஈடுபட முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல