வியாழன், 6 ஜனவரி, 2011

குட்டைப் பாவாடை அணிய தடையில்லை

நாட்டின் சில பகுதிகளில் குட்டைப் பாவாடை அணிவதற்கு இலங்கை அரசு தடை விதித்ததாக கூறி வெளியான செய்திகளுக்கு அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

சமய கலாசார இடங்களுக்கும், மக்கள் அதிகம் செறிந்து காணப்படும் இடங்களுக்கும் செல்லும் போது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஆடைக் கலாச்சாரம் குறித்து அரசு புதிய விதிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கடந்த சில தினங்களாக தெரிவிக்கப்பட்டுவருகிறது.

ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போன்று எதுவித விதிமுறைத் திட்டங்களையும் தாம் அறிவிக்கவில்லை எனவும் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் சுற்றுலாத் துறையில் நாம் காணும் வளர்ச்சி பாரிய அளவில் வீழ்ச்சி அடையும் எனவும் அரசு தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல