திங்கள், 21 பிப்ரவரி, 2011

தனது சொந்தப் பேரனை பெற்றெடுத்த 61 வயது பெண்மணி

இலினொயிஸ் மாநிலத்தில் குழந்தையொன்றை பிரசவித்த மிகவும் வயதான பெண்மணி என்ற சாதனை படைப்பு தனது மகளுக்கு வாடகைத் தாயாக செயற்பட்டு சொந்த பேரனை கருவில் சுமந்து 61 வயது பெண்ணொருவர் பெற்றெடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கிறிஸ்ரின் கஸே என்ற பெண்மணியே தனது மகள் சாரா கோனல்லிற்காக குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை யொன்று இல்லாத சாராவும் அவரது கணவர் பில்லும் வாடகைத் தாயொருவர் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்தபோது தானே வாடகைத் தாயாக செயற்பட கிறிஸ்ரின் ன்வந்தார்.

இதன் பிரகாரம் சாராவின் கரு முட்டையையும் பில்லின் விந்தணுவையும் கருக்கட்ட வைத்து பெறப்பட்ட முளையம் கிறிஸ்ரினின் கருப்பையில் பதிக்கப்பட்டது.

இந்நிலையில் கிறிஸ்ரின், நோர்த் வெஸ்டர்ன் ஞாபகார்த்த மருத்துவமனையில் ஆரோக்கியான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். குழந்தைக்கு பின்னியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிறிஸ்ரின் இலினொயிஸ் மாநிலத்தில் குழந்தையொன்றை பெற்றெடுத்த மிகவும் வயதான பெண் என்ற சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல