அளவு கடந்த பொறாமையால் தனது காதலன் காதைக் கடித்து துண்டாக்கி அதனை நாயொன்றுக்கு இரையாக்கிய குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு யோக்க்ஷியரிலுள்ள ஹல் எனும் இடத்தைச் சேர்ந்த ஜூன் தொம்ஸன் (44 வயது) என்ற பெண்ணே தனது காதலரான திரேவர் வெயின்மானின் (45 வயது) காதைக் கடித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவதினம் தனது காதலன் பிறந்த நாளை முன்னிட்டு ஹோட்டலொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொள்வதற்கு ஜூன் தொம்ஸன் வந்திருந்தார்.
அச்சமயம் ஜூன் தொம்ஸனுக்கும் திரேவர் வெயின்மானுக்கும் பழக்கம் ஏற்பட்டு 14 மாத காலமே ஆகியிருந்தது. இதன் போது உணவக பணிப்பெண் ஒரு வர் திரேவர் வெயின்மானுக்கு குடிபானமொன்றை அன்புடன் பரிமாறி உபசரிப்பதையும் அதனை திரேவர் வெயின்மான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதையும் அவதானித்த ஜூன் தொம்ஸனுக்கு பொறாமை ஏற்பட்டது.
மேற்படி பிறந்தநாள் விருந்துபசாரத்தையடுத்து மதுபோதையிலிருந்த ஜூன் தொம்ஸன், திரேவர் வெயின்மானுடன் அவரது மாடிக் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அதுவரை அளவு கடந்த பொறாமையால் மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்த ஜூன் தொம்ஸன், திரேவர் வெயின்மானைத் தாக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் சினமிகுதியால் திரேவர் வெயின்மானின் காதைக் கடித்து, அத்துண்டாக்கிய பகுதியை துப்பியுள்ளார்.
இதன் போது அங்கிருந்த ஜூன் தொம்ஸனின் நாயான அல்பி துண்டாக்கிய காதை உண்டுள்ளது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த ஹல் கிறவுண் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் மெட்டியர், ஜூன் தொம்ஸனின் நடவடிக்கையால் அவரது காதலருக்கு மோசமான காயம் ஏற்பட்டதை கவனத்திற் கொண்டு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பில் ஹம்பெர்ஸைட் பிராந்திய பொலிஸ் அதிகாரியான சாம் செஸ்டர் விபரிக்கையில், ஆண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவற்றை ஆண்கள் துணிச்சலுடன் வெளிப்படுத்த ன்வர வேண்டும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக