புதன், 16 பிப்ரவரி, 2011

நாங்கள் செய்தது தவறு எங்களை மன்னியுங்கள் - இந்திய மீனவர்கள்-!

வடபகுதி கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் மேற்கொண்டதை இந்திய கடற்றொழிலாளர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதுடன் தமக்கு மன்னிப்பளித்து விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, ஒரேசமயம் நூற்றியாறு பேர் பருத்தித்துறை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர்களை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு வடமராட்சி கடற்றொழில் சமுகத்தினர் முன்வந்துள்ளனர்.

இதனை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரே தாய்மொழியினை பேசுவது மாத்திரமல்லாமல் வாழ்வாதாரத்திற்காக ஒரே தொழிலை மேற்கொள்பவர்கள் என்ற ரீதியில் வடமராட்சி சமுகத்தினரின் மனிதாபிமானத்தை பாராட்டியதுடன் சட்டம் தனது கடமையினைச் செய்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பும் வரையில் அவர்களை கௌரவமாக பாதுகாத்து பராமரித்து அனுப்ப வேண்டியது எமது கடமை என்பதையும் வலியுறுத்தினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல