புதன், 16 பிப்ரவரி, 2011

பிரபல சிங்கள திரைப்பட நடிகை வினு வெத்தமுனி படுகொலை!

பிரபல சிங்கள திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான வினு வெத்தமுனி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரத்மலானையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத மூன்று பேரினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

ரத்மலானை ராஜங்கன மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயர் கோட் ஒன்றைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

உயிரிழந்த நடிகையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

'மமய் பிரியே ஆதரே' 'சிங்க தெவ் துவ' போன்ற திரைப்படங்களில் வினு வெத்தமுனி முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல