புதன், 21 மார்ச், 2012

10 பவுன்ட்ஸ்களைக் கொடுத்து 1லட்சம் பவுன்ட்ஸ்களை சுருட்ட முனைந்த இலங்கை தமிழ் தம்பதிகள் !

லண்டனில் கடைவைத்திருக்கும் இலங்கை தமிழ் தம்பதியினர் லொத்தர் பரிசு வென்ற வயோதிபரை ஏமாற்றியதால் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதியொன்றில் கடைவைத்திருக்கும் அல்பிரட் ஜீவராஜா (வயது 45) மற்றும் அவரின் மனைவி அனா ஜீவராஜா (வயது 38) ஆகியோரே இவ்வாறு கைது செய்ய்ப்பட்டவர்களாவர்.




சிலவாரங்களுக்கு முன்னர் டேவிஸ் எனும் 73 வயதுடைய வயோதிபர் ஒருவர் இவர்களின் கடைக்கு வந்து தான் வாங்கிய லொத்தரி சீட்டின் இலக்கங்கள் விழுந்துள்ளனவா என சோதித்து பார்க்கும்படி சொல்லி லொத்தரி சீட்டைக்கொடுத்துள்ளார். அச்சமயம் கடையில் நின்ற திருமதி ஜீவராஜா அந்த லொத்தரி சீட்டைப் பரிசோதித்த போது அந்த லொத்தரி சீட்டின் 5 நம்பர்கள் மற்றும் போனஸ் நம்பர் விழுந்துள்ளது தெரியவந்தது. உடனே படுவேகமாக செயற்பட்ட திருமதி ஜீவராஜா உடனே அந்த பெரியவரிடம் "வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு சிறிய தொகையை வென்றுள்ளீர்கள்" என்று கூறி அந்த பெரியவரிடம் 10£ களை கொடுத்து அப்பெரியவரை அனுப்பிவைத்துள்ளார்.

ஆனால் உண்மையில் அந்த பெரியவரின் பற்றுச்சீட்டில் வென்ற இலக்கங்களுக்கு அந்த பெரியவருக்கு கிடைக்கவேண்டிய தொகை £156,659 பவுண்ட்ஸ்களாகும்.

அதன்பின்னர் அவ்விடயத்தை தனது கணவரிடம் கூறி, ஒரு வாரத்தின் பின்னர் நேஷனல் லொத்தரி நிலையத்துடன் தொடர்புகொன்டு தாம் லொத்தரியில் வென்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களின் கடையில் உள்ள நேஷனல் லாட்டரி இயந்திர கணணியிலும் இந்த சீட்டு வென்றதாக பதியப்பட்டு நாட்கள் கடந்த நிலையில் இவர்கள் தம்முடன் தொடர்புகொள்வதனால்
நேஷனல் லாட்டரி முகவர்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளது.

உடனே அவர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் இருவரும் மாட்டிக் கொண்டனர். நீங்கள் தான் இந்த நேஷனல் லாட்டரியைப் போட்டீர்கள் என்றால், எந்தக் கடையில் போட்டீர்கள் எனப் பொலிசார் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜீவராஜா மற்றும் அவர் மனைவியால் சரியான பதிலைக் கூற முடியவில்லை.

வழக்கமாக அந்த பெரியவர் ஒவ்வொரு கிழமையும் இவர்களின் கடையில்தான் லொத்தரி சீட்டு வாங்குவது வழக்கம். ஆனால் இம்முறை அவர் அங்கு அருகில் உள்ள சந்தையொன்றில் வாங்கியுள்ளார்.

அவர்கள் இருவரும் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இருவருக்கும் சுமார் 14 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த பெரியவரை பொலிசார் தேடிக் கண்டுபிடித்து அப் பணத்தை ஒப்படைத்துள்ளனர்.

நடந்து முடிந்த விடயங்களை அறிந்த அந்த பெரியவர் தான் அல்பிரட் ஜீவராஜா மற்றும் அவர் மனைவியை மன்னித்துவிட்டேன் என்று கூறியுள்ளது அவரது பெருந்தன்மையக் காட்டுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல