புதன், 21 மார்ச், 2012

Toshiba வின் ஒரு பயனற்ற கண்டுபிடிப்பு

பேப்பர்களில் காணப்படும் உள்ளடக்கங்​களை அழிக்கும் போட்டோ கொப்பி இயந்திரம்

இதுவரை வெறும் பேப்பர்களை பிரதியெடுப்பதற்காக போட்டோ கொப்பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டுவந்தது. தற்போது சற்று உயர் தொழில்நுட்பத்தின் மூலம் போட்டோ கொப்பி எடுத்த பேப்பரில் காணப்படும் உள்ளடக்கங்களை அழிப்பதற்குரிய போட்டோ கொப்பி இயந்திரத்தை Toshiba நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.





தற்போது காணப்படும் எழுத்துக்களை அழிக்கும் அல்லது மறைக்கும் போல் பொயின் பேனாக்களின் தொழில் நுட்பத்திலேயே இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது, எனினும் விசேடமாக வெப்பத்தின் மூலம் பேப்பரை உலர்த்தும் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எழுத்துக்கள் அழிக்கப்பட்ட அதே பேப்பரை மீண்டும் 5 தடவைகள் பாவிக்கலாம்.

பிரதியெடுத்தல், அழித்தல் எனும் இரண்டு வேலைகளையும் செய்யவல்ல இந்த இயந்திரத்தின் மூலம் மேலதிகமாக நீல நிறத்தில் பிறின்ட் செய்துகொள்ள முடியும். எனினும் விரைவில் ஏனைய வர்ணங்களையும் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என Toshiba நிறுவனம் உறுதியளித்துள்ள.

ஆனால், Toshiba வின் இந்த புதிய கண்டுபிடிப்பை வரவேற்கும் அதே நேரம், இதனால் அதிக பிரயோஜனம் கிடையாது என்பதே பலரின் கருத்து. ஒரு பேப்பரில் உள்ளவற்றை அழிக்க விரும்பினால் அதற்காக அந்த போட்டோ கொப்பி இயந்திரத்திற்கு பயன் படுத்தப்படும் கெமிக்கல் செலவு, மற்றும் அதனை அழித்து முடியும்வரை தேவைப்படும் மின்சார செலவு, அதற்கு தேவைப்படும் நேரம் இவைகளையெல்லாம் கணக்கெடுத்து பார்க்கும்போது அந்த பேப்பரை கிழித்து கடாசிவிட்டு புதிய பேப்பரையே பாவிக்கலாம் என்கின்றார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல