வியாழன், 29 மார்ச், 2012

உலகில் இதுவரை ஒரு போதும் மேற்கொள்ளப்படாத புரட்சிகர முகமாற்று அறுவைச் சிகிச்சை

இதுவரை ஒருபோதும் மேற்கொள்ளப்படாத புரட்சிகரமான முகமாற்று அறுவை சிகிச்சையொன்றை அமெரிக்க மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனை படைத்துள்ளனர்.



1997 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டுக்கு தவறுதலாக இலக்காகி முகத்தில் படுகாயத்திற்கு உள்ளான றிச்சர்ட் லீ நொரிஸ் (37 வயது) என்ற நபருக்கு தாடைகள், பற்கள் மற்றும் நாக்கு என்பனவற்றை உள்ளடக்கி முகமாற்று அறுவைச் சிகிச்சையை அமெரிக்க மேரிலான்ட் பல்க லைக்கழக மருத்துவர்கள் மேற்கொண்டு மேற்படி சாதனையை படைத்துள்ளனர்.
முகத்தில் படுகாயமடைந்த றிச்சர்ட் லீ நொரிஸ் இதுவரை காலமும் தனது கோரமான முகத்தை மறைப்பதற்கு முகமூடி அணிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சிக்கல் மிக்க அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கான நிதியை அமெரிக்க கடற் படை வழங்கியிருந்தது.
இந்த முகமாற்று சிகிச்சையில் கையாளப்படும் புதிய செயன் முறைகள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் காயமடைந்த படைவீரர்களுக்கு உதவும் என அமெரிக்க கடற்படை நம்பிக்கை கொண்டுள்ளது.
மேற்படி முகமாற்று செயற்கிரமத்துக்கான பிரதான அறுவை சிகிச்சை 36 மணி நேரத்துக்கு நீடித்தது. இந்த அறுவை சிகிச்சை 72 மணி நேர தொடர் அறுவைச் சிகிச்சைகளின் ஓர் அங்கமாக அமைந்தது.

துப்பாக்கிச் சூட்டில் தனது உதடுகள், மூக்கு என்பனவற்றை இழந்த றிச்சர்ட் லீ நொரிஸுக்கு மேற்படி முகமாற்று அறு வைச் சிகிச்சை மூலம் புதுவாழ்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது றிச்சர்ட் லீ நொஸுக்கு அறுவை சிகிச்சை மூலம் தனக்கு பொருத்தப்பட்ட பற்களை பற் தூரிகையால் சுத்தப்படுத்தவும், முகச் சவரம் செய்யவும், வாசனைகளை முகரவும் முடிவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

முதலாவது முக மாற்று அறுவை சிகிச்சையானது 2005 ஆம் ஆண்டு பிரான்ஸில் நாயால் கத்தில் கடிகாயத்துக்கு உள்ளான பெண்ணுக்கு மேற் கொள்ளப்பட்டது. உலகின் முதலாவது முழுமையான முகமாற்று அறுவை சிகிச்சை 2010 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

றிச்சர்ட் லீ நொரிஸுக்கான முகமாற்று அறுவை சிகிச்சையில் 150 மருத்துவர்கள், மருத்துவத்தாதிகள் மற்றும் மருத்துவ உத்தியோகத்தர்களைக் கொண்ட குழு பங்கேற்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல