வெள்ளி, 30 மார்ச், 2012

உலகின் மிகவும் சிறிய நாய்க் குட்டி

உலகிலேயே மிகவும் சிறிய நாய்க்குட்டி என்ற பெயரை அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் எல் டொராடோ ஹில்ஸ் எனும் இடத்தில் பிறந்த “பெயொன்ஸ்' என்ற நாய்க்குட்டி பெறுகிறது.கடந்த 8 ஆம் திகதி பிறந்த இந்த நாய்க் குட்டியின் நீளம் 4 அங்குலம் மட்டுமேயாகும்.



இது நாய்க் குட்டியொன்றுக்கு ஒரே சமயத்தில் பிறந்த 4 குட்டிகளில் ஒன்றாகும். இந்நிலையில் நாய்க்குட்டியின் மார்பு பகுதியில் அழுத்தி அதன் இருதயத்தை மீள இயங்கச் செய்த மிருக வைத்தியர்கள் அதற்கு வாய் மூலம் சுவாசம் அளித்து அதன் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இந்நாய்க் குட்டிக்கு ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் ஒரு தடவை வாய் மூலம் போத்தல் பால் உணவாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்நாய்க் குட்டியை உலகின் மிகவும் சிறிய நாய்க்குட்டி என “கின்னஸ்' உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல