ஞாயிறு, 25 மார்ச், 2012

தமிழ்நாட்டு மச்சானுக்காகவே தம்பியை எதிர்த்தார் அக்கா

இலங்கையின் மூத்த சகோதரியான இந்தியா, இலங்கை மீது அன்பு இல்லை என்ற காரணத்துக்காக அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தமிழ் நாட்டு மச்சானுடன் இருக்கும் திருமண பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆதரவு வழங்கியது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


ஹாலிஎல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளைத் தோற் கடித்தபோது, இந்தியா இலங்கைக்குப் பெரும் உதவிகளைச் செய்தது. எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டு மச்சான் சின்னச் சண்டையைப் போட்டார்.

மூத்த அக்காளின் கணவர் தானே இந்த மச்சான். இந்த முறை தம்பிக்கு உதவ முடியாது. அப்படி உதவினால் நான் விவாகரத்துச் செய்வேன் என மச்சான் கூறினார். அவர் வெறுமனே அப்படிக் கூறவில்லை. இதனால் விருப்பமின்றியேனும் திருமணத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவை அக்காவுக்கு நேர்ந்ததுடன் தனது சின்னத் தம்பிக்கு எதிராக வாக்களித்தார்.
அமெரிக்காவின் சண்டித்தனத்துக்கு அஞ்சி, அக்கா, தனது சின்னத்தம்பிக்கு எதிராகவும் வாக்களிக்கவில்லை. அவர் தனது திருமணத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே ஆதரவு வழங்கினார். இதனால் அடுத்தமுறை அமெரிக்கா, சண்டித்தனம் செய்யும்போது, மூத்த அக்கா, தம்பியின் பக்கம் இருப்பார் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல