சிரியாவில் நடைபெறும் போர் செய்திகளை சேகரிக்க சென்ற மிகா யமமொடொ என்ற ஜப்பான் பெண் செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். சண்டை நடைபெறும் அலெப்போ நகரில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தி உள்ளது. இவருடன் சென்ற ஏனைய மூன்று செய்தியாளர்களை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களில் ஒருவர் லெபனான் நாட்டு பெண் செய்தியாளர் என்றும் மற்றவர் துருக்கி நாட்டை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 45வயதுடைய யமமொடோ யுத்த செய்திகளை சேகரிப்பதில் திறமையானர் என்றும் இவர் டோக்கியோவை தளமாக கொண்டு இயங்கும் யப்பான் பிரஸ் நியூஸ் ஏஜன்சிக்காக பணியாற்றினார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விருது பெற்ற இவர் ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் போர் நடைபெற்ற காலத்தில் அங்கு நேரடியாக சென்று செய்தி சேகரித்த அனுபவம் கொண்டவராவார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் மோதல்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கு பிரபல பத்திரிகையாளர் மேரி கொல்வின் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக