வியாழன், 23 ஆகஸ்ட், 2012

இளவரசர் ஹரியின் நிர்வாணப் படங்கள் இணைய தளங்களில்!

பிரிட்டிஷ் இளவரசர் ஹரியும் இளம் பெண் ஒருவரும் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகர ஹோட்டல் ஒன்றில் உடம்பில் ஆடைகள் எதுவுமின்றி நிர்வாணமாக இருக்கும் படங்கள் அமெரிக்க இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் உல்லாசமாக சென்றிருந்தபோதே 27 வயதான இளவரசர் ஹரியின் இரண்டு படங்களை கிசுகிசுவுக்கு பேர்போன TMZ இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், மனித உரிமை, உலகம்
படத்தில் இருப்பவர் இளவரசர் ஹரி தான் என்பதை அரச குடும்ப மாளிகை சார்பில் பேசவல்ல அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் மேலதிக கருத்துக்கள் எதனையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

இந்த இரண்டு படங்களும் கடந்த வெள்ளியன்று எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

பிரிட்டனில் அடுத்த முடிக்குரியவராக பிரகடனப்படுத்தப்படுபவர்களின் வரிசையில் மூன்றாவதாக இருப்பவர் இளவரசர் ஹரி.

இளவரசர் ஹரி பிரத்தியேக களியாட்டமொன்றுக்காக நண்பர்களை ஹோட்டல் ஒன்றுக்கு வரவழைத்திருந்த நிலையில் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் படங்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பது பற்றி விளக்கம் இல்லை. எனினும் கைத்தொலைபேசி கமரா மூலம்தான் படங்கள் பிடிக்கப்பட்டிருக்கின்றன என்று ஊகிக்கப்படுகின்றன.

அமெரிக்க ஊடகங்களில் பெரும்பாலும் வெளியாகியுள்ள இந்தப் படங்கள் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் இன்னும் வெளியானதாக தெரியவில்லை.

இதேவேளை, இளவரசர் ஹரி ஊடகங்களின் பிடியில் இலகுவில் சிக்கக்கூடியவராக இருப்பவர் என்று இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் தந்தை பிபிசியிடம் கூறினார்.

'என்ன தான் இருந்தாலும் இளவரசர் ஹரி ஒரு பிரிட்டிஷ் படைவீரர். அவரிடம் நல்ல குணங்கள் தான் உள்ளன. அவர் ஒரு இராணுவ வீரராக அவரது கடமையை சரியாகத்தான் செய்கிறார். அதனைத் தான் மக்கள் விரும்புவார்கள்' என்று ஹரியின் பால்ய நண்பர் தாமஸின் தந்தை அலெக்ஷ் தெரிவித்தார்.

2005-இல் நண்பர் ஒருவரின் விநோத உடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இளவரசர் ஹரி, நாஜி ஒருவரைப் போல உடை அணிந்தபடி வெளியான படத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

அதேபோல் 2009-இல், அவரது இராணுவ படைப்பிரிவிலுள்ள ஆசிய நாட்டவர் ஒருவரின் மனம் புண்படும்படியாக, கூடாத வார்த்தையை பயன்படுத்துகின்ற வீடியோ காட்சி வெளியானதை அடுத்து இளவரசர் ஹரி மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : BBC Tamil

படங்கள் :  இணையத்திலிருந்து பெறப்பட்டவை
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல