வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அமெரிக்கா ஒபாமாவின் மூர்க்கத்தனத்தின் வேர் ஆவணப்படத்திற்கு அமோக வரவேற்பு

அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவை அழைத்துச் செல்லும் பாதை எப்படிப்பட்டது, எதிர் காலத்தில் அமெரிக்கா என் னவாகும் என்ற கேள்விக் கணைகளுடன் இந்த ஆவ ணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆவணப் படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட போது, அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டதன் மூலம் இது வரை 93 கோடி டாலரை அள்ளி சாதனையும் புரிந்திருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் இயக்குநர் தினேஷ் டி’ சௌசா எழுதிய “ஒபாமாவின் மூர்க்கத்தனத்தின் வேர்” என்ற நூலை மையமாகக் கொண்டு இந்த ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள் ளது. இந்த நூல் மிக அதிக அளவில் விற்பனையான நூல் என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவில் ஜனாதி பதி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் இந்த ஆவணப்படம் வெளி யாகியிருப்பது குறிப்பிடத் தக்கது. “2016ஆம் ஆண்டில் ஒபாமாவின் அமெரிக்கா” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை ஜன நாயகக் கட்சி மற்றும் குடி யரசுக் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர்.

இந்த ஆவணப்படம் அமெரிக்காவில் 1,800 திரை யரங்குகளில் திரையிடப் பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த ஆவணப்படம் மிகச் சிறந்த 10 திரைப்படங்களுள் 7-வது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் வசூலான தொகை 93 கோடி டால ராகும். இந்த ஆவணப் படம் இயக்கப்பட்டிருக் கும் விதம் பார்வையாளர் களை அப்படியே காட்சியு டன் ஒன்றிப் போகச் செய் வதாகவும், அமெரிக்காவின் மன்னராட்சி முதல் ஒவ் வொரு மாற்றத்தையும் அப் படியே கண்முன் கொண்டு வருவது இப்படத்தின் சிறப் பம்சமாக உள்ளது என்றும் பார்வையாளர்கள் கூறி வரு கின்றனர். உலகின் வல்லர சாக பறைசாற்றப்படும் ஒரு நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் ஒருவர், அவரது கொள்கை யால் அடுத்த நான்கு ஆண்டு களில் எத்தகைய மாற்றங் களைச் செய்யப் போகிறார் என்பதை விவரிக்கிறது. இப் படியே சென்றால் 2016ம் ஆண் டில் அமெரிக்கா என்னவாக இருக்கும் என்பதையும் கேள்வியாக எழுப்பியிருக் கிறார். அமெரிக்க மக்களின் ஒவ்வொரு நம்பிக்கையும், எதிர்பார்த்த மாற்றமும் எவ்வாறு இருக்கிறது. ஆனால் நடந்திருக்கும் மாற்றங்கள் என்ன என்பதோடு, எப்படி தவறான வழிகாட்டுதலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது என் பதையும் விளக்குகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல