ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தமிழீழம் என்ற வார்த்தைக்கு தடை விதிக்கத் தீர்மானம்

தமிழீழம் என்ற வார்த்தைக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியல் கட்சிகள் தமிழ் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இது தொடர்பில் ஏற்கனவே தேர்தல் செயலகம் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ரெலோ கட்சி மட்டுமே தற்போது தமிழீழம் என்ற சொல்லை தனது கட்சிப் பெயரில் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலி மற்றும் நாய் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என அண்மையில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதேவேளை, தமிழீழம் என்ற சொல்லை தடுக்கும் நோக்கில் சிங்களப் பிரஜைகளினால் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ரெலோ பேச்சாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தனி நாட்டு கோரிக்கையை தமது கட்சி முன்வைக்கவில்லை எனவும், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தையே தமது கட்சி வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல