ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

மரணத்தின் வாசலுக்கு சென்று உயிர் தப்பிய சிறுமி (வீடியோ இணைப்பு)

மரணத்தின் வாசலுக்கு சென்று உயிர் தப்பிய அதிசயம் என்று சொல்வார்களே அதுதான் இதுபோல் இருக்கிறது. ஒரு தந்தையின் விளையாட்டுத் தனத்தினால் அதிஷ்டவசமாக பிள்ளையொன்று உயிர் தப்பியுள்ளது. அமெரிக்காவில் உடுப்பு சலவை செய்யும் இடம் ஒன்றில், தந்தையின் விளையாட்டு வினையில் முடிந்துள்ளது. உடுப்பு காயவைக்கும் இயந்திரம் ஒன்றினுள் தனது மகளை வைத்து பூட்டியுள்ளார் தந்தையொருவர்.

ஆனால், முன்னரே அதில் காசு போடப்பட்டு இருந்ததால் அது உடனே வேலை (Start) செய்யத் தொடங்கிவிட்டது. எவ்வளவு கடுமையாக முயற்சித்தும் அவ்வியந்திரத்தின் கதவை அவரால் திறக்க முடியவில்லை. இதானல் தாயும் தந்தையும் பதறிப்போனார்கள். தந்தையார் உடனே விரைந்துசென்று அந்நிலையத்தின் பாதுகாப்பாளரை அழைத்து வந்துள்ளார்.

சுமார் 1 நிமிடம், உலரவைக்கும் இயந்திரத்தினுள் சிக்கித் தவித்துள்ளார் அச்சிறுமி. விரைந்து வந்த காவலாளி உடனடியாக மின்சாரத்தை துண்டித்தார். அதன் பின்னர் கதவுகளைத் திறந்து தந்தையார் பிள்ளையை வெளியே எடுத்துள்ளார். என்ன ஆச்சரியம், அதிஷ்டவசமாக அச்சிறுமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல