அனுமதிப்பத்திரம் இல்லாத போலியான வெளிநாட்டு பயண முகவர்களிடம் பணத்தைச் செலுத்தி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் வடமாகாண உதவிமுகாமையாளர் எஸ். புருஷோத்தமன் தெரிவித்தார்.
குறிப்பாக வடபகுதியைச் சேர்ந்த அதிலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களே இடைத் தரகர்களின் போலியான வார்த்தைகளை நம்பிபெருமளவு பணத்தைச் செலுத்தி ஏமாறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழ் இளைஞர் யுவதிகள் இடைத்தரகர்களிடம் பணத்தைச் செலுத்தி ஏமாறவேண்டாம் எனவும் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள முகவர்களிடம் மட்டுமே பணத்தைச் செலுத்தி பயணத்தை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொண்டவர்களுக்கு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கே வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான உரிமை உண்டு எனவும் வேலைவாய்ப்பு பணியகத்தின் வடமாகாண உதவி முகாமையாளர் குறிப்பிட்டார்.
போலியான இடைத் தரகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 0118799012 0118799013 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டோஅல்லது 011879903 என்ற தொலைநகல் மூலமாகவோ அறயத்தரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் கொரிய நாட்டுக்கு 18 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்களை அனுப்புவதற்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் மேலைநாடுகளான கனடா இத்தாலி சுவிஸ் லண்டன் போன்ற நாடுகளுக்குச் செல்லும் எண்ணத்தில் தமிழ் இளைஞர் யுவதிகள் இதைப் புறக்கணித்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறைந்த செலவில் மாதாமாதம் 200000 ரூபா வரையில் கொரியாவில் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். எனவே தமிழ் இளைஞர் யுவதிகள் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்தகைய திட்டவிதிகள் மூலமாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்வரவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக