செவ்வாய், 18 செப்டம்பர், 2012

விண்டோஸ் 8: பைல் ஹிஸ்டரி

தற்போது சோதனைப் பதிப்பாக நுகர்வோருக்குத் தரப்பட்டுள்ள விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ""பைல் ஹிஸ்டரி''என்ற புதிய வசதி அனைவரின் கவனத்தைக் கவர்வதாக உள்ளது. இந்த செயல்பாடு, லைப்ரரீஸ், காண்டாக்ட்ஸ், பேவரிட்ஸ் மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள அனைத்து பைல்களுக்கும் பேக் அப் எடுக்கிறது.

மாறா நிலையில், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பைல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை தனி ட்ரைவில் எழுதி வைக்கிறது.
இந்த இடத்திலிருந்து பயனாளர்கள், தங்கள் பைல்களின் பேக் அப் காப்பிகளைப் பெறலாம். ஒரு குறிப்பிட்ட பைல், சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு நாளில் இருந்த நிலையில் பெற விரும்பினால், இந்த ட்ரைவிலிருந்து பெறலாம். பைல் ஒன்று கெட்டுப் போய்விட்டால், முந்தைய நிலையிலிருந்தும் File History மூலம் அதனைப் பெறலாம்.
இந்த வசதியைப் பெற, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலமாகச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடம் சென்று அல்லது பைல் சென்று, எக்ஸ்புளோரர் ரிப்பனில் History பட்டனை அழுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட லைப்ரேரி, போல்டர் அல்லது தனி பைலின் முந்தைய ஹிஸ்டரி முழுவதும் காட்டப்படும். நமக்குத் தேவையான நிலையில் அந்த பைலை எடுத்துக் கொள்ளலாம்.

நாம் பெற விரும்பும் பைல், காட்டப்படும் பட்டியலில் எது எனத் தெரியாவிட்டால், பைல் பெயர், மாற்றப்பட்ட முக்கிய சொற்கள், நாள் குறித்து தேடியும் அறியலாம். அல்லது பைல் பிரிவியூ காட்சி பெற்று, தேவையான காட்சியைக் கிளிக் செய்து பைலைப் பெறலாம். மவுஸ் கிளிக் செய்தும் பெறலாம்; டச் ஸ்கிரீனைச் சற்று தட்டியும் பெறலாம். ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Backup and Restore என ஒரு செயல்பாடு இருந்து வருகிறது. இந்த செயல்பாடுதான் சற்று மேம்படுத்தப்பட்டு ""பைல் ஹிஸ்டரி'' என இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கிறது. இந்த தகவல்கள் Building Windows 8 blog என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வலைமனையில் தரப்பட்டுள்ளன.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல