செவ்வாய், 18 செப்டம்பர், 2012

உங்களுக்கு தெரியுமா?

Attachment (அட்டாச்மெண்ட்):

இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள், சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைத்து அனுப்புகையில் அவற்றை அனுப்பும் நேரமும் டவுண்லோட் செய்திடும் நேரமும் அதிகமாகும்.
Dialogue Box (டயலாக் பாக்ஸ்):

கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது நம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்று இயங்க விண்டோஸ் இயக்கத்தில் எழுந்து வரும் ஒரு தகவல் கேட்பு கட்டம். தேவைப்படும் தகவல்களைத் தர இதில் தயாராக படிவம் போல வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Registry (ரெஜிஸ்ட்ரி):

விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்து அமைக்கப் பட்டுள்ள ஒரு பைல். கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட் வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பைல். இதில் நாமாக மாற்றங்கள் ஏற்படுத்தும் முன் இதன் பேக் அப் காப்பி ஒன்றை எடுத்துக் கொள்வது நல்லது. புரோகிராம்களின் அடிப்படைச் செயல்பாட்டில் மாற்றங்களை மேற்கொள்ள இந்த பைலில் உள்ள வரிகளில் தான் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

Driver (ட்ரைவர்):

விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான டிரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும்.

Network (நெட்வொர்க்):

தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர்களையும் சார்ந்த சாதனங்களையும் இணைத்து உருவாக் கப்படும் ஒரு வலைப்பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க் குகளும் சாத்தியமே.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல