செவ்வாய், 18 செப்டம்பர், 2012

திலீபனை முதல் பக்கத்தில் போடுடா எல்லாம் சரி வரும்

இவர்களைப் பற்றி ஏராளமான முறைப்பாடுகள் நல்லூர் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறை முகாமிற்கும்  பொற்பதித் தலைமை அரசியல் முகாமிற்கும் சென்ற வண்ணம் இருந்தது. அருகில் இருக்கின்ற சில தனியார் கல்வி நிலையங்களுக்குக் கல்வி கற்கவரும் கிராமப் புற மாணவிகளை ஆசை வார்த்தை காட்டி பாலியல் உறவு கொண்டு தென்பகுதியில் இருந்து வருபவர்களுக்கும் அவர்களை பலிக்கடாவாக்கின்றனர் என்பதே அந்த முறைப்பாடுகள்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் சில புலனாய்வு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆதாரங்களை அவர்கள் சேகரித்த பின்னர் விடுதி அதிரடியாகச் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த 17 வயது மாணவிகள் மூவரும் நான்கு தென்பகுதிச் சகோதரங்களும் பிடிக்கப்பட்டனர். இந்த விடயம் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் தெரியும்.


இதில் என்ன இருக்கின்றது என்றால் அந்த விடுதியின் முகப்பில் தமிழீழ தேசியத் தலைவரின் 4 அடி நீள அகலத்தைக் கொண்ட சிறுத்தையைக் கையில் வைத்திருந்த அழகிய போட்டோ தொங்கவிடப் பட்டிருந்தது.  அதை விட மாவீரர் நினைவு கலண்டர்கள், மற்றும் திலீபனின் போட்டோக்கள் என பாலியல் உறவு கொண்ட அறைகள் முதல் அனைத்துப் பகுதியிலும் இவை காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

இந்த விடுதியை நடாத்தியவர்களும் இயக்கப் பாணியில் நடந்து கொண்டதாக அந்த விடுதிக்கு அருகில் இருந்த கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். அந்த விடுதியின் முதலாளியான வயதான நபர் பெண்களுக்கான உள்ளாடைகள் தைக்கும் தொழில் செய்து மிகப் பிரபலமாக வந்தவர். இவரது மருமகன் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக இருந்திருக்கின்றார். ஆதலால் இவர்கள் தொடர்பாக கதைப்பதற்கு வர்த்தகர்கள் தயங்கினர்.


இருந்தும்  விபச்சார நடவடிக்கையில் பிடிபட்ட இரு சகோதரர்கள் உட்பட்ட நான்கு உள்ளூர் இளைஞர்களும் அவ்வாறான தொழிலில் இன்றுவரை ஈடுபடமுடியாத தண்டனை வழங்கப்பட்டது.

விடுதலைப் புலிகளை வைத்து தசை வியாபாரம் செய்தவர்களின் கதை இது.

புலிகளை வைத்து இவ்வாறானவர்கள் மட்டும்  வியாபாரம் செய்யவில்லை. ஏராளமானவர்கள் இவ்வாவறு வியாபாரம் செய்து ஓகோ என இருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் முள்ளி வாய்க்காலில் இருந்து முற்றாக அகற்றப்பட்ட பின்னர் முதல் முதலாலக உதயன் பத்திரிகை கடந்த சனிக் கிழமை  எந்தப் பத்திரிகையும் செய்ய முடியாத ஒரு 'தில்' வேலையைச் செய்துள்ளது.


ஆனால் இந்தத் 'தில்' கடந்த  2009, 2010,2011 களில் வரவில்லை.


காரணம் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் அப்போது அதற்கு வரவில்லை. ஆனால் இன்று வந்ததன் நோக்கம் என்ன???????


தனக்கு ஏற்படும் களங்கங்களைக் களைவதற்கு விடுதலைப் புலிகளைப் 'பெயார்அனட்லவ்லி' ஆக பிரயோகப்படுத்துகின்றது தேசியப் பத்திரிகை.



உதயனின் தில்லான தில்லாலங்கடி வேலைகளைப் பார்த்துப் புல்லரித்துப் போகும் புண்ணியவான்களுக்குச் சமர்ப்பனம்.

திலீபனை முதல்ல பக்கத்தில் போட்டது மட்டுமல்லாது அதன் கீழ் அதற்குப் பொன்சர் செய்தது யார் என விமான ரிக்கட் நிறுவனத்தின் பெயரையும் சூசகமாக போட்டு அசத்திய உதயனே உனது  தந்திரம் மெச்சுவதற்குரியது


நையாண்டிப் புலவர்



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல