செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இரட்டைக் கொலைகளுக்கு காரணமாக அமைந்த மாட்டுக் கன்று

புத்தளத்தில் உள்ள வில்பத்த பிரதேசத்தில் பக்கத்து வீட்டு 34 வயதுப் பெண் ஒருவரால் வயோதிபத் தம்பதி ஒன்று கடந்த நாட்களில் கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளது.

கொல்லப்பட்டவர்களில் கணவனுக்கு 79 வயது. மனைவிக்கு வயது 75.

கொலையாளிப் பெண் பிரபல வர்த்தகர் ஒருவரின் மனைவி.



வயோதிபத் தம்பதியின் வீட்டுத் தோட்டத்துக்குள் புகுந்து பெண்ணின் மாட்டுக் கன்று பயிர்களை மேய்ந்து விட்டது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம்தான் இரட்டைக் கொலைகளில் முடிந்து உள்ளது.

கோபத்தின் உச்சத்துக்கு சென்ற பெண் வயோதிபத் தம்பதியின் குசினிக்குள் புகுந்து கத்தி ஒன்றை எடுத்து கிழவனை தாக்கி இருக்கின்றார். சத்தம் கேட்டு வந்த கிழவியையும் தாக்கி இருக்கின்றார்.

இருவரும் இறந்து விட்டார்கள் என்று முடிவெடுத்து விட்டார். இவரது உடுப்பில் இரத்தக் கறைகள் காணப்பட்டன. உடுப்பு மாற்றினார். இரத்தக் கறை பட்டு இருந்த உடுப்பை நெருப்பில் போட்டு இருத்தார். வயோதிபத் தம்பதியின் வீட்டுக்கு திரும்பச் சென்றார்.

வயோதிபத் தம்பதியின் வீட்டுக்குள் சொந்த தங்க நெக்ளஸை மறைத்து ஒளித்து வைத்தார். பொலிஸார் வந்து விசாரிக்கின்றபோது நெக்ளஸை கண்டு பிடிப்பார்கள், இது கொள்ளைக்காரர்களால் நடத்தப்பட்ட கொலைகள் என முடிவுக்கு வந்து விடுவார்கள் என்பது பெண்ணின் எண்ணமாக இருந்தது.

வயோதிப தம்பதியின் வீட்டுக்கு வந்தவர் உதவி, உதவி என்று பெரிதாக ஓலமிட்டுக் கத்தினார். கிழவனுக்கு குற்றுயிர் இருந்திருக்கின்றது. சத்தம் கேட்டு வந்த அயலவர்களுடன் சேர்ந்து கிழவனை வாகனம் ஒன்றில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று இருக்கின்றார்.

ஆனால் உயிர் போகின்ற தறுவாயில் கிழவன் மிகவும் கஷ்டப்பட்டு கொலையாளி இப்பெண்தான் என்பதை அயலவர்களுக்கு சொல்லி விட்டார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின் இறந்து போனார். கிழவியின் கழுத்தில் மிக ஆழமான காயம். ஆறு அங்குலம் ஆழமானது என மரணப் பரிசோதனையில் தெரிய வந்தது.

கணவனுக்குக்கூட கொலையாளிப் பெண் விபரங்களை வெளிப்படுத்தி இருக்கவில்லை. பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வந்தபோது கணவன் திடுக்கிட்டுப் போனார். கொலையாளிப் பெண் கைது செய்யப்பட்டார்.

கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, பெண்ணால் மறைத்து வைக்கப்பட்ட தங்க நகை ஆகியவற்றைப் பொலிஸார் கண்டு பிடித்து எடுத்து உள்ளார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல