அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்று சொல்லப்படும், மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் கொதித்துப்போயுள்ளனர். பல உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்கள் தாக்கப்பட்டதோடு, மேலும் பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு முன்பாக முஸ்லீம்கள் போராட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பைக் காண்பித்து வருகின்றனர். இதேவேளை இலங்கையில் உள்ள முஸ்லீம்களும் கடந்த வெள்ளிக்கிழமை தமது எதிர்ப்பைக் காண்பித்திருந்தனர். இதனை அடுத்து இன்று திங்கட்கிழமை காலையும் ஒரு பாரிய போராட்டம் வெடித்துள்ளது. கிழக்கு மாகான கவர்னர் அலவி மெளலானா தலையில் இக்கண்டனப் போராட்டம் அமைதியாக இடம்பெற்றது.
சுமார் 10,000 த்துக்கும் அதிகமான முஸ்லீம்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். இதனை அடுத்து அமெரிக்க தூதரம் மூடப்பட்டதோடு, அங்கே பணி புரிந்த அதிகாரிகள் பாதுகாப்பு காரணமாக பின் வாசல் வழியாக வெளியேறியுள்ளனர் எனவும் தெரியவருகிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளை, இலங்கைப் பொலிசார் பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இவர்கள் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் சில செய்திக்குறிப்புகள் மேலும் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள மொத்த சனத்தொகையில் முஸ்லீம்கள் 7% சதவீதமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கவிடையமாகும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக