உடலநலக் குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த அவருக்கு வயது 77. கடந்த 30 ஆண்டுகளாக நடித்து வந்த இவர் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான் தேசிய விருதையும், 2009 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழில் சத்திரியன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடித்த மலையாள படங்களில் ஹிரிதுபேதம், ஏகாந்தம், பெரும்சன், சந்தனகோபாலம், காட்டதொரு பெண் பூவு போன்ற திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இவர் பலமுறை சிறந்த துணை நடிகருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதமாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த திலகன் கேரளாவின் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இன்று சிகிச்சைப் பலன் இன்றி இறந்து போனார். கேரளாவில் உள்ள அவரது இல்லத்தில் திலகன் உடல் வைக்கப் பட்டுள்ளது. பல பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
அவரது இறுதி சடங்குகள் இன்று திங்கட்கிழமை மாலை திருச்சூர் அருகே அரசு மரியாதையுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக