சனி, 22 செப்டம்பர், 2012

தற்கொலையில் முடிந்த பேஸ் புக் காதல்: திடுக்கிடும் புதிய தகவல்கள், அவிழாத மர்ம முடிச்சுக்கள்

பேஸ் புக் காதல் நிறைவேறாத காரணத்தால் ஏமாற்றம் அடைந்து தற்கொலை செய்த இராணுவ மேஜரின் மரணம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகளில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பேஸ் புக் காதலியும், பேஸ் புக் காதலியின் பெற்றோரும் நிராகரித்தமையால் கப் வாகனத்துக்குள் கைக்குண்டை உடலில் வெடிக்க வைத்து மாத்தறையில் கடந்த வாரம் தற்கொலை செய்து இருந்தார் மேஜர். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இரு குழந்தைகளின் தந்தை. தவறுதலாக கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்பு, பேஸ் புக் தொடர்பு ஆகியவற்றின் மூலம்தான் காதல் ஆரம்பம் ஆகி இருக்கின்றது. இவை எல்லாம் பழைய தகவல்கள்தான்.

ஆனால் இவரும், பேஸ் புக் காதலியும் முன்பு எப்போதும் சந்தித்து இருக்கவில்லை என்பது அப்பட்டமான பொய் என பொலிஸார் அதிரடியாக கண்டு பிடித்து உள்ளனர்.

உண்மையில் பேஸ் புக் காதலி, பேஸ் காதலியின் பெற்றோர் ஆகியோருடன் மேஜர் மிக நெருக்கமாக தொடர்பு வைத்து வந்திருக்கின்றார். இத்தொடர்பு மாதக் கணக்கில் ஆனது. மேஜரின் மடிக் கணனியில் இருந்து இவை குறித்த இரகசியங்கள் அம்பலத்துக்கு வந்து உள்ளன.

பேஸ் புக் காதலியுடனும், பேஸ் புக் காதலியின் பெற்றோருடனும் மேஜர் எடுத்துக் கொண்ட சுமார் 200 இற்கும் அதிகமான புகைப்படங்கள் மடிக் கணனியில் சேமிக்கப்பட்டு இருந்தன. பேஸ் புக் காதலியுடனும், பேஸ் புக் காதலியின் பெற்றோருடனும் மேஜர் ஜால, தெகிவளை மிருகக் காட்சிச்சாலை போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்று இருக்கின்றார் என்பதை இப்புகைப்படங்கள் காட்டிக் கொடுத்து உள்ளன.


பேஸ் புக் காதலியால் வழங்கப்பட்டு இருந்த பரிசுப் பொருட்களை பேஸ் புக் காதலியின் பெற்றோரிடம் தற்கொலை செய்கின்றமைக்கு முன் மேஜர் ஒப்படைக்க முயன்று இருக்கின்றார். ஆனால் மீள பெற பேஸ் புக் காதலியின் பெற்றோர் மறுத்து இருக்கின்றனர்.

க. பொ. த சாதரண பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்ற இருந்த மாணவியுடன்தான் மேஜருக்கு காதல் வந்து இருக்கின்றது. இருவரும் மொபைல், ஸ்கைப், பேஸ் புக் ஆகியவற்றின் மூலம் காதலை வளர்த்துக் கொண்டனர்.

இருவரும் முன்பு நான்கு தடவைகள் சந்தித்து இருக்கின்றனர் என்கிறார் இம்மாணவி. மாணவி தனியார் வகுப்புக்களுக்கு சென்ற வேளைகளில் இச்சந்திப்புக்கள் இடம்பெற்று உள்ளன.

மேஜருக்கு வயது 37. மாணவி இவரை விட 20 வயது இளையவர்.

பேஸ் புக் காதலியின் கடந்த பிறந்த தினத்துக்கு மேஜர் மடிக் கணனி ஒன்றை அன்பளிப்பு செய்து இருக்கின்றார். இதன் பின் இருவர் ஸ்கைப்பில் இரவிரவாக பல மணி நேரங்கள் உரையாட முடிந்து உள்ளது. பேஸ் புக் காதலியின் வீட்டுக்கு மேஜர் பல சந்தர்ப்பங்களிலும் அடிக்கடி வந்து சென்றிருக்கின்றார் என்பதை அயலவர்கள் மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தி உள்ளனர். மேஜரின் கப் வாகனம் பல நாட்கள் இவ்வீட்டில் பேஸ் புக் காதலியின் தகப்பனால் திருத்த வேலைக்காக ஒரு முறை தரித்து விடப்பட்டு இருந்து உள்ளது.

ஆனால் மேஜருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க பேஸ் புக் காதலியின் தகப்பன் மறுத்தமையின் பின்னணிதான் குழப்பமாக உள்ளது. ஏனென்றால் இவ்வீட்டுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக மேஜர் வந்து சென்று இருக்கின்றார் என்பதை பொலிஸாருக்கு பேஸ் புக் காதலியின் தகப்பன் ஒப்புக் கொண்டு உள்ளார். மேஜர் திருமணம் ஆனவர் என்றும் இரு குழந்தைகளின் தந்தை என்றும் அறிந்து வைத்திருந்த நிலையிலேயே மகளுடனான தொடர்புக்கு பேஸ் புக் காதலியின் பெற்றோர் அனுமதித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே திருமணமான ஒருவருக்கு மகளை கொடுக்க பேஸ் புக் காதலியின் தகப்பன் விரும்பி இருக்கவில்லை என்பது மர்மமான விடயமாக உள்ளது.

மேஜர் தற்கொலை செய்த விபரத்தை தொலைக்காட்சியில் பார்த்து அறிந்து கொண்டார் மேஜரின் மனைவி. மேஜரின் மனைவி மூன்று மாதங்களுக்கு முன்னர் விவாகரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்து இருந்தார். தாபரிப்புப் பணமாக மனைவிக்கு மேஜர் மாதாந்தம் ரூபாய் 8000 கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேஜரும் இணங்கி இருந்தார்.

பேஸ் புக் காதலியை மறவுங்கள், இருவரும் சந்தோஷமாக மீண்டும் குடும்பம் நடத்த முடியும் என்று மேஜருக்கு மனைவி அறிவுறுத்தி இருக்கின்றார். மேஜரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து பேஸ் புக் காதலியின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை கண்டு பிடித்து தொடர்பு கொண்டு இருக்கின்றார். மேஜருடனான காதலை முடிவுக்கு கொண்டு வர சொல்லி பேஸ் புக் காதலியை கேட்டு இருக்கின்றார்.

மேஜர் கப் வாகனத்தை குத்தகைக் கடன் அடிப்படையில்தான் வாங்கி இருந்தார். கடன் பணத்தை செலுத்த என்று கேட்டு மனைவியிடம் ரூபாய் 75,000 பெற்று இருக்கின்றார். மேஜர் தற்கொலை செய்த பின்னர் பொலிஸார் பேஸ் புக் காதலியின் தாயின் கைப்பைக்குள் ரூபாய் 70000 இருந்து உள்ளது. இது குறித்து பொலிஸார் சீரியஸாக பேஸ் புக் காதலியின் தாயிடம் விசாரித்தனர். வீட்டுக்கு மின்சார உபகரணங்கள் வாங்குகின்றமைக்காக இப்பணத்தை வைத்திருக்கின்றாரென பொலிஸாருக்கு பேஸ் புக் காதலியின் தாய் தெரிவித்து உள்ளார். ஆனால் இது மேஜரின் பணமாகவே இருக்க வேண்டும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பேஸ் புக் காதலியின் தகப்பன் இராணுவத்தில் சார்ஜண்ட் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர்.

இத்தற்கொலை தொடர்பான முந்திய தகவல்களுக்கும், தற்போதைய தகவல்களுக்கும் நிறையவே முரண்பாடுகள் காணப்படுவதால் பொலிஸார் தீவிர உஷார் அடைந்து உள்ளார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல