சனி, 22 செப்டம்பர், 2012

சிறைக்குள் அடைக்கப்பட்ட பிச்சைக் காரர்கள் - (படங்கள் இணைப்பு)

தெற்கு சீனாவில் உள்ள ஜியான்க்ஸி மாகாணத்தின் க்ஸிஷான் நகரத்தில் அமைந்துள்ள வன்ஷோவு தாவோயிஸக் கோயிலின் வருடாந்த திருவிழா வைபவம் செப்டம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்றது.


இதில் சுமார் 100 000 யாத்திரீகர்கள் பங்கு பற்றுவர் என எதிர்பார்க்கப் பட்டதால் அங்கு குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிச்சைக்கார்கள் அனைவரையிம் சிறைக் கைதிகள் போல் ஒரே இடத்தில் 165 அடி நீளமுள்ள இரும்புக் கூட்டில் அதிகாரிகள் அடைத்து வைத்திருந்தனர்.

இந்தப் புகைப்படம் சீனாவின் பிரபல டுவிட்டர் வேர்சனான வெயிபோ (Weibo) இல் வெளியாகி பல்லாயிரக் கணக்கான சீன மக்களின் எதிர்ப்பலைகளையும் கோபத்தையும் சம்பாதித்துள்ளது. இதில் ஒரு மைக்ரோ பிளாக்கர் கருத்துத் தெரிவிக்கையில் 'இதைப் பார்க்கும் போது ஒரு மிருகக் காட்சிச் சாலை (zoo) ஐப் போல் உள்ளது எனவும் இது அம் மனிதர்களின் கௌரவத்துக்கு இழுக்கு' எனவும் கூறியிருந்தார்.

இன்னொரு பிளாக்கர் தெரிவிக்கையில், 'எமது அரசாங்கம் எப்போதும் சீனா மனித உரிமைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள நாடு என்று கூறி வருவதை முன்னர் நான் நம்பவில்லை. ஆனால் இப்போது தெரிகின்றது. அதாவது நம் அதிகாரிகள் மிகவும் ஸ்மார்ட் ஆனவர்கள். ஏனைய மக்களை நாய்களைப் போன்று தான் இவர்கள் மதிப்பார்கள்' என்று கூறியிருந்தார்.

கடந்த 10 வருடங்களாக சீன அரசு கலாச்சார மதிப்புக்களைப் பேணுவதற்காக இது போன்ற விழாக்களுக்கு ஊக்கமளித்து வருகின்ற போதும் இந்த சம்பவத்தால் அதன் ஊழியர்கள் எவ்வளவு மோசமாகத் திருவிழாக்களை ஏற்பாடு பண்ணுகிறார்கள் என்பதற்குச் சான்றும் கெட்ட பெயரும் ஏற்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல