சனி, 22 செப்டம்பர், 2012

இஸ்லாத்தை விமர்சிக்கும் விளம்பர பலகை? : விரைவில் நியூயோர்க் நெடுஞ்சாலைகளில்

இஸ்லாமியர்களை மறைமுகமாக விமர்சிக்கிறது என குற்றம் சுமத்தப்படும் விளம்பர பலகை ஒன்றை அமெரிக்காவின் நியூயோர்க் நகர சப்வே தெருக்களில் காட்சிப்படுத்துவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செப்.11 தாக்குதல்களை அடுத்து, இஸ்லாமிய மையத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவரான பாமெலா கெலர் (Pamela Geller) என்பவர் இவ்விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்கான சட்டபூர்வ அனுமதியை வாங்கியுள்ளார். இதையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவ்விளம்பரம் நியூயோர்க்கின் 10 சப்வே நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

'In any war between the civilized man and the savage, support the civilized man. Support Israel. Defeat Jihad' என அவ்விளம்பர பலகையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் கூறுகிறது.

அதாவது 'நாகரீகமான மனிதர்களுக்கும், கொடூரமானவர்களுக்கும் இடையில் நடைபெறும் எந்த யுத்தத்திலும் நாகரீகமானவர்களுக்கு ஆதரவளியுங்கள். இஸ்ரேலுக்கு ஆதரவளிப்போம். ஜிகாத்தை தோற்கடிப்போம்' என பொருள்படுகிறது.

இந்த விளம்பரம் ஏற்கனவே சான் பிரான்ஸிஸ்கோ நகர பேருந்துக்கள் சிலவற்றில் கடந்த சில வாரங்களாக காட்சிப்படுத்தப்படுவதாகவும், இதில் ஜிகாத் அல்லது புனித யுத்தம் எனும் சொற்பிரயோகங்களை நீக்கிவிடுமாறு பலர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

வாஷிங்டன் போக்குவரத்து மைய பகுதிகளிலும் இவ்விளம்பரத்தை பிரசுரிக்குமாறு கெலர் சார்பில் விண்ணபிக்கப்பட்ட போதும், வாசிங்டன் அரச நிர்வாகம் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நியூயோர்க் சப்வே களில் பிரசுரிக்கப்படும் இவ்விளம்பரம், அவ்வழியே பயணிக்கும் இஸ்லாமியர்களுக்கு மனவேதனையை உருவாக்கலாம். ஏற்கனவே இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிரான வன்முறை போக்கு அதிகரித்திருப்பதால், இவ்விளம்பரத்தை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு அமெரிக்க இஸ்லாமிய அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கண்டித்து, அமெரிக்க அரசினால் தயாரிக்கப்பட்ட 30 செக்கன் கொண்ட விளம்பரம் பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சிகளில் காசுகொடுத்து போடப்படுவதாக விமர்சனம் எழுந்திருந்த நிலையில், அமெரிக்காவில் இவ்வாறு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் துளிர்விட தொடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டுகின்றன சர்வதேச ஊடகங்கள்.

இதேவேளை பாகிஸ்தானில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரவாம பரவத்தொடங்கியதை அடுத்து, அங்குள்ள ஆஸ்திரேலிய, பிரான்ஸ் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதுடன் மக்கள் அமைதியான முறையில் போராட வேண்டும் என பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று பெருமளவிலான பாகிஸ்தானியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு கண்ணீர் புகை குண்டுவீசி அவர்கள் கலைக்கப்பட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல