புதன், 12 செப்டம்பர், 2012

சீன துணை அதிபர் மாயம்

சீன துணை அதிபரும், அடுத்த ஆண்டு அதிபராக போகிறவருமான ஜி ஜின்பிங்கை கடந்த 1-ந் தேதியில் இருந்து காணவில்லை என்ற தகவல் சீனாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் கதி என்ன? என்று அரசு தரப்பில் எதுவுமே கூறப்படவில்லை. சீனாவின் வெளியுறவுத்துறை இணையதளத்தில், ஜி ஜின்பிங் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது.

அதன்பிறகு சீனாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனை ஜி ஜின்பிங் சந்திக்கவில்லை. சிங்கப்பூர், டென்மார்க் ஆகிய நாட்டு பிரதமர்களையும் அவர் சந்திக்கவில்லை.

அந்த அளவுக்கு ஜி ஜின்பிங்குக்கு என்ன பாதிப்பு? என்று அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் விசாரித்தபோது, ஜி ஜின்பிங், நீச்சல் குளத்தில் நீந்தியபோது அவரது முதுகில் காயம் ஏற்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார். ஆயினும், இதுகுறித்து அரசுத்தரப்பில் எதுவுமே கூறப்படாததால், ஜி ஜின்பிங் குறித்த வதந்தி இறக்கை கட்டி பறக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் பலர் இதுபற்றி கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல