இத்தாலியை சேர்ந்த நிறுவனம் சமையல் அறைக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய ஜம்போ ஃப்ரிட்ஜை அறிமுகம் செய்துள்ளது. காபி மேக்கர், டிவி உள்பட அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. இதன் விலை ரூ.22 லட்சம். இத்தாலியில் ஃப்ரிட்ஜ் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் ‘மெனகினி’.
இது ‘லா கம்பூசா’ என்ற பெயரில் அதிநவீன ஜம்போ ரெப்ரிஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது. 3 தனித்தனி கதவுகளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காய்கறி, பழங்கள், கூல்டிரிங்ஸ், ஐஸ்வாட்டர், மதுபானங்கள் வைப்பதற்கான அறை ஆகியவை ஒரு பகுதியில் உள்ளன. ஃப்ரிட்ஜின் மைய பகுதியில் காபி மேக்கர், மைக்ரோவேவ் ஓவன், ஸ்டீம் ஓவன், ஐஸ் மேக்கர், மட்டுமின்றி பாத்திரங்கள் போட்டு வைப்பதற்கான டிரேயும் உள்ளது.
சமையல் அறையில் இல்லத்தரசிகளின் வேலை பளுவை குறைக்கும் நோக்கில் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஃப்ரிட்ஜை உருவாக்கியிருப்பதாக மெனகினி இன்ஜினியர்கள் கூறுகின்றனர். இதில் பிளாட் மானிட்டருடன் கூடிய டிவியும் இருப்பது கூடுதல் சிறப்பம்சம். சமைத்துக் கொண்டே ஹாலில் எட்டி எட்டி டிவி பார்க்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. சமைத்துக் கொண்டே ஜம்போ ஃப்ரிட்ஜில் சீரியல் பார்க்கலாம்.
இதன் நீளம் 8.2 அடி. விலை ரூ.22 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கண்ணை கவரும் வண்ணங்களில் இதன் கதவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 3 கதவுகளையும் இழுத்து மூடிவிட்டால் ஃப்ரிட்ஜ் போலவே தெரியாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக