இன்டர்நெட்டில் ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பிரபல பின்னணி பாடகி சின்மயி, போலீசில் புகார் அளித்துள்ளார். பாடகி சின்மயி, தனது தாயார் பத்மாசினியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து இரண்டு புகார் மனுக்களை கொடுத்தார். அவர் கொடுத்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
பின்னர் பாடகி சின்மயி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நான், தமிழ் உள்பட ஏழு மொழிகளில் சுமார் 600 சினிமா பாடல்களை பாடி உள்ளேன். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானேன். மக்களின் ஆதரவால் எனக்கு புகழ் கிடைத்தது. எனக்கு கிடைத்த புகழை அழிக்கும் சம்பவங்களும் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. டுவிட்டர் இணையதளத்தில் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை அனுப்பி மிரட்டி வருகிறார்கள். ஆபாச படங்களையும் வெளியிட்டு விடுகிறார்கள்.
டுவிட்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இதுபோன்ற ஆபாச படங்களையும், தகவல்களையும் நாங்கள் தடுத்துவிட்டோம். இருந்தாலும் பேஸ் புக்கில் இதுபோல் ஆபாச தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? என்பதை நான் கண்டுபிடித்து, போனில் பேசி கண்டித்துவிட்டேன். கண்டிக்கும்போது என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எனது சாதியை சொல்லி இழிவான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எனக்கு தொல்லை கொடுக்கும் 6 பேர் பெயர், அவர்கள் முகவரி போன்றவற்றை நான் புகார் மனுவில் இணைத்துள்ளேன். உதவி பேராசிரியர் ஒருவர் கூட அதில் இருக்கிறார். போலீசார் இவர்களை சட்டப்படி என்ன செய்வார்களோ, அதை செய்யப்பட்டும், என்று கூறினார்.
சின்மயி கொடுத்துள்ள மற்றொரு புகாரில், மும்பையைச் சேர்ந்த சாய்பாபா டெலிபிலிம்ஸ் பட நிறுவனத்தின் அதிபர் கஜேந்திரசிங் சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ரூ.12 லட்சம் தர வேண்டியுள்ளது. அந்த பணத்தையும் வசூலித்து தரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக