உலகின் பல பாகங்களில் உள்ள பெண்களுக்கு தாய்ப் பால் கொடுத்தால் அழகு குறைந்து விடும் என்ற அச்சம்தான் அதிகமாக இருக்கிறது. அதே சமயம் பிறந்த குழ்ந்தைக்கு தாய்ப் பால் கொடுக்கவும் ஆசைப் படுகிறார்கள். இதை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் குழந்தை பெற்ற தாய்மார்கள் விரைவில் பணம் சம்பாதிக்கவேண்டி தங்களிடம் உள்ள அதிகப்படியான தாய்ப்பாலை விற்பனை செய்ய சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அவர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தையே அதிகம் பயன்படுத்துவதாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தாய்ப்பாலின்றி தவிக்கும் தாய்மார்கள் நாங்களும் எங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறோம் என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்ளவே மறைமுகமாக காசு கொடுத்து இந்த தாய்ப்பாலை வாங்குகின்றனர்.
நவீன பால் பவுடர்களை பயன்படுத்துவதற்குப் பதில் தாய்ப்பாலை கொடுப்பது நல்லது என்று கூறிக்கொள்ளும் அவர்களிடையே இதை வாங்கும் மோகம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அப்படி வாங்கும் தாய்ப்பால் குழந்தைகளை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. பால் கொடுத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களின் தாய்ப்பால்கள் சோதிக்கப்பட்டு வகைப் படுத்தப்படுகின்றன.
பின்னர் இந்த முறையின் படி தாய்ப்பாலை வாங்கவோ விற்கவோ எங்களை அணுகலாம் என்று இதற்கென செயல்படும் ஒன்லிதிப்ரெஸ்ட்.கோ.யூகே (onlythebreast.co.uk) என்ற சமூக வலைதளம் கூறுகிறது.
பிரிட்டனின் எஸ்ஸெக்ஸ் மற்றும் நியூகேஸ்ட்ல் பகுதியில் உள்ள பெண்கள் தங்களின் ஒரு அவுன்ஸ் தாய்ப்பாலை அப்படியோ அல்லது உறைந்த நிலையிலோ கொடுப்பதற்கு ஒரு பவுண்டுக்கு கிடைக்கிறது. அதே அளவு தாய்ப்பால் அமெரிக்காவில் 2 டாலருக்கு கிடைக்கிறது என்று இந்த இணையதள செய்தி தெரிவிக்கிறது.
தாய்ப்பால் கொடுக்க முடியாத பெற்றோர்களின் குழந்தைகளுக்கென வங்கிகளில் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது. அதை அந்த வங்கிகளில் இலவசமாக கொடுக்கவோ அல்லது வாங்கவோ சட்டம் வழிவகை செய்கிறது. ஏற்கெனவே லண்டனில் தாய் பால் மூலம் ஐஸ் கிரீம் தயாரித்து அமோகமாக விறபனை செய்து வருகிறார்கள் என்பது தெரியும்தானே? இது போன்ற தாய்ப் பால் வங்கி இப்போது சென்னையிலும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக