ஞாயிறு, 14 அக்டோபர், 2012

விடுதலை புலிகளுக்கும் மற்றும் இந்திய இராணுவத்துக்கும் இடையே போர் அரம்பித்து 25 வருடங்கள் நிறைவு

போருக்கு அவசரப்படுவது ஆபத்து என இந்திய அமைதிகாக்கும் படையின் செயற்பாடு வெளிப்படுத்தியது
கே.பாலச்சந்திரன்

10, ஒக்டோபர் 2012, இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் (ஐ,பி.கே.எப்) மற்றும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் (எல்.ரீ.ரீ.ஈ) இடையில் யுத்தம் ஆரம்பித்து 25 வருடங்கள் நிறைவடைவதை குறிக்கிறது,அந்தயுத்தம் 1987 முதல் 1990 வரை ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு முழவதையும் சூழ்ந்திருந்தது.

இராணுவ மற்றும் அரசியல் வெற்றிகளை காண்பிப்பதற்காக இரண்டரை வருடங்களாக இந்திய இராணுவம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளின் நிர்ப்பந்தத்தால் பிரிவினைவாத எல்.ரீ.ரீ.ஈ யினர் யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பியோடி வன்னிக் காட்டுப் பிரதேசங்களில் ஒளிந்திருக்க கட்டாயப் படுத்தப்பட்டதுடன், ஐ,பி.கே.எப்பின் சூறையாடலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் ஒரு சமாதான ஏற்பாட்டையும் மேற்கொண்டனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக ஐ,பி.கே.எப்பின் சரித்திரம் தலைகீழாக மாற்றமடைய நேர்ந்ததை கவனிக்காமல் விட்டுவிட முடியாது.கடுமையான சண்டையிடும் முயற்சி இராணுவ சரித்திரத்தில குறைவடைய நேர்ந்ததுக்கு போதுமான தயாரெடுப்புகள் இல்லாமல் அவசரமாக போரில் இறங்கியதால் ஏற்பட்ட ஆபத்துக்களை உதாரணமாகக் கூறலாம்.

புறப்பட்ட நோக்கம் மற்றும் முறைகள் பற்றிய குழறுபடியான அரசியல் சிந்தனைகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு ஆயுதப்பிரிவுகள் மற்றும் முப்படைகளின் சேவைகளில் போதிய ஒருங்கிணைப்பு இல்லாமை என்பன போரிடும் படையினரிடத்தில் ஒரு தீங்கான தாக்கத்தை தோற்றுவித்தது, அதன்காரணமாக 1987 ஜூலையில் ஏற்படுத்திய இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கையிலு; கூறப்பட்ட நோக்கங்களை முற்றாக நடைமுறைப்படுத்தாமலேயே அது 1990ல் தீவினை விட்டு வெளியேற நேர்ந்தது. இந்த தவறான சாகசச் செயல் 1,155 இந்திய உயிர்களை பலி வாங்கியது.பொதுமக்களின் இழப்பு 7,000 என எல்.ரீ.ரீ.ஈ சொல்லியிருந்தாலும் அது ஊகத்துக்கு காரணமான ஒரு விடயம்.

ஐ,பி.கே.எப் ஆட்கள் எழுதியிருப்பதின்படி புது தில்லியில தங்கியிருந்த உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள்,போதுமான கருத்தியல், உபகரணங்கள் மற்றும் செயல்பாட்டு தயாரிப்பு என்பனவற்றின் ஆயத்தமின்றி படையினர் மீது அவசரமாக போரைத் திணித்தார்கள். யதார்த்த களநிலைமைகளின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளும் ஒரு கட்டமைப்பு,யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் சரியான இடத்தில் வைக்கப்படவில்லை. அதேபோல பொருட்கள் மற்றும் படையினர் போன்ற முக்கிய வளங்கள் என்பனவற்றின் போதுமான விநியோகம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. எல்.ரீ.ரீ.ஈ யினரது அரசியல், இராணுவ, மற்றும் உளவியல் தன்மைகளைப் பற்றிய போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைக்ககூடியதாக இருக்கவில்லை, ஏனெனில் அவைகள் எதுவும் முன்னர் சேகரிக்கபப் படவில்லை. என்ன நடக்கிறது என்வதை அறிந்து கொள்வதற்காக உள்ளுர் மக்களுடன் தொடர்பாடல்களை ஏற்படுத்துவதற்கு எற்றவகையில் போதியளவு தமிழ் பேசும் அதிகாரிகள் மற்றும் ஆட்கள் இருக்கவில்லை. துருப்புகள் தங்கள் கரங்களில் இராணுவ வரைபடங்கள் இல்லாமல் வெறும் சுற்றுலா பயண சாலை வரைபடங்களின் பிரதிகளை மட்டும் வைத்துக்கொண்டு முன்னேறிச் செல்லும்படி கேட்கப்பட்டனர்.

ஐ,பி.கே.எப் அதிகாரிகளான கௌதம் தாஸ் மற்றும் எம்.கே. குப்தா ரே என்பவர்கள் எழுதியுள்ள “ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட விபத்து: இந்திய இராணுவ அமைதி காக்கும் இயக்கம் 1987 – 1990” (ஹர் ஆனந்த், புது தில்லி மற்றும் விஜித யாப்பா, கொழும்பு பிரசுரங்கள்) எனும் நூலில் இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே இந்திய அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களால்,பல்வேறு சூழ்நிலைகள் பற்றி ஆராயப்பட்டன. ஆனால் உடன்படிக்கைக்கு சற்று முன்னர் ஏற்பட்ட சூழ்நிலையானது,ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் ‘அமைதி காப்பது’என்பதாக இருந்தது.

ஒரு மோதலை எதிர்பார்க்காததால்,தீவுக்கு அனுப்பப்பட்ட முதல் காலாட்படை பிரிவான 54 வது காலாட்படை பிரிவிற்குள் பயிற்சி வழங்கப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பு படைப்பிரிவினரை உட்படுத்தவில்லை. ஒக்டோபர் 1987ல் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்கிற நிலை வந்தபோதும்கூட ஐ,பி.கே.எப் அதன் பின் தளமான சென்னையில் ஒரு அடிப்படை கிளர்ச்சி எதிர்ப்பு கல்லூரியை அமைத்திருக்கவில்லை. ஐ,பி.கே.எப் ஸ்ரீலங்காவில் இருந்தபோது அதன் முதல் பொதுக் கட்டளை தளபதியாக (ஜி.ஓ.சி) இருந்த மேஜர் ஜெனரல் ஹர்க்கிரற் சிங் ஸ்ரீலங்காவில் தலையீடு: இந்திய அமைதிகாக்கும் படையின் அனுவங்கள் சொல்லியிருப்பவை (விஜித யாப்பாஈகொழும்பு,2006) எனும் நூலில் தெரிவிப்பது,அந்த இடைவெளியை பூர்த்தி செய்வதற்கு தன்னிடம் இருந்த மிகக் குறைந்த வளங்களை பயன்படுத்தி தனது சொந்த முயற்சியில் யாழ்ப்பாணத்தில் ஒரு தற்காலிக பயிற்சி வசதியை அமைப்பதைத் தவிர தனக்கு வேறு தெரிவு எதுவும் இருக்கவில்லை என்று.

சாத்தியமான சூழ்நிலைகளில் கைவசம் உள்ள மூலோபாயங்களை பயன்படுத்தி ஒரு யுத்த நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை. 54 வது படைப்பிரிவு ஹைதராபாத்திலிருந்து கிளம்புவதற்கு முன்னர் அதற்கு உறுதியான பணி எதுவும் வழங்கப்படவில்லை. தாஸ் மற்றும் குப்தா ரே சுட்டிக் காட்டுவதுபோல எச்சரிக்கை கட்டளை வழங்கப்படவில்லை, அடிப்படை இலக்குகளை குறிவைத்து நடவடிக்கையின் தேவைகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. தயாரிப்புகளுக்கான கால அவகாசத்தை உருவாக்குவதை அடிப்படையாக கொண்டு “கட்டளை வழங்குவதற்கு முன் நகரவேண்டாம்” என்கிற அறிவித்தலும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த பயிற்சி முறைகளை பின்பற்றத் தவறியதால் இராணுவத்தின் உயர்பீடத்தில் உள்ளவர்கள் அடிப்படை கல்லூரி அறிவுறுத்தல்களைக்கூட அவாகள் உதாசீனப் படுத்தியுள்ளார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.இறுதியில் ஆயதக் கையிருப்பு மிகவும் குறைவான நிலையில் மோசமாக இணைக்கப்பட்ட 54 வது பிரிவு ஒரு நாள் அறிவித்தலில் யாழ்ப்பாணம் நோக்கி நகரவேண்டியிருந்தது.இறுதியில் இதற்குள் சேர்க்கப்பட்ட ஏனைய பிரிவுகளும் மிகவும் குறுகிய கால முன்னறிவித்தலின்படி கவசவாகனம்,பீரங்கி,வெடி பொருட்கள் மற்றும் கூடாரங்கள் போன்ற அத்தியாவசியமான உபகரணங்கள் எதுவுமின்றி படகிலேற வேண்டியிருந்தது. இந்தப் படைப்பிரிவுகள் ஹைதரபாத்,லக்னோ,மற்றும் திண்டுக்கல் போன்ற அமைதி நிலையங்களில் இருந்து வந்தபடியால் மொத்தத்தில் குறைவான பலமுடையவர்களாகவே இருந்தன. அவை பாடப்புத்தகங்களின்படிதான் செயற்படுபவைகள் என்றால், அவற்றை யுத்தத்துக்கு அனுப்பவதில் பயன் இல்லை.

மன நிறைவினை அடிப்படையாகக் கொண்ட கடின தெரிவுகள்

தாஸ் மற்றும் குப்தா ரே, சகல மட்டங்களிலும் பயங்கரமான நிலையில் குற்றவியல் தன்மையான அலட்சியப் போக்கு இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்கள்,ஆனால் அதற்கான பழியை பிரதானமாக புலனாய்வுத்துறையினர்மீது போடுகிறார்கள், ஏனெனில் அவை எல்.ரீ.ரீ.ஈ இந்தியாவடன் ஒருபோதும் சண்டையிடாது,அவர்கள் நமது பையன்கள் என்று பிரதமர் ராஜீவ் காந்தியை நம்பவைத்திருந்தார்கள். 1987ல் இராணுவத் தலைவர் ஜெனரல்.சுந்தர்ஜியின் மனநிறைவின் அடிப்படையில் ஐ,பி.கே.எப், எல்.ரீ.ரீ.ஈ யினை ஏழு நாட்களில் நசுக்கி அழித்துவிடும் என்கிற தற்புகழ்ச்சியை நம்பி,யாழ்ப்பாணத்தை 96 மணித்தியாலங்களில் கைப்பற்றும்படி புது தில்லி ஆணையிட்டது.

ஐ,பி.கே.எப்பினது இராணுவ பலத்தின்மீதிருந்த அளவுக்குமீறிய தன்னம்பிக்கையும் அதற்கு நேர்மாறாக எல்.ரீ.ரீ.ஈயின் பலத்தை குறைத்து மதிப்பிட்டதும்,1987 செப்ரம்பர் – ஒக்டோபரில் எல்.ரீ.ரீ.ஈயுடன் மோதல்கள் உருவாகிய வேளையில் பாரிய அரசியல் மற்றும் இராணுவ தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அடிப்படையாக அமைந்தன. ஐ,பி.கே.எப், போதிய திட்டமிடல் மற்றும் வளங்களின் ஒதுக்கீடுகள் இன்றி விட்டுக்கொடுக்காத பிடிவாதமுடைய எல்.ரீ.ரீ.ஈயினருக்கு எதிராக தனது படைகளை பயன்படுத்த வேண்டிய கடின தெரிவுக்கு ஆளானது. எல்.ரீ.ரீ.ஈ ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதை நிராகரித்து செயற்பாட்டினை தடை செய்யும் விதமாக ஒன்றின் பின் ஒன்றாக பல சாக்குபோக்குகளைச் சொல்லி,இந்தியர்களின் பொறுமையை சோதித்தது.

ஆனால் ஏனைய முடிவுகளைப் போலவே,கடின தெரிவுக்கு செல்லும் முடிவையும் உள்ளுர் ஐ,பி.கே.எப் மட்டத்தில் அல்லது சென்னையில் உள்ள தளத்தில் இருந்து எடுக்கப் படவில்லை, ஆனால் புது தில்லியில் உள்ள பிரதமரின் அலுவலகம் கொழும்பிலிருந்து இயங்கும் இந்தியத் தூதர் ஜே.என் டிக்சிற் மற்றும் உளவுத்துறை முகவர்கள் ஆகியோரின் அறிவுரைகளின்படி இந்த முடிவை மேற் கொண்டது. இதன் உள்ளீடுகளில் களத்தில் இருந்த ஐ,பி.கே.எப் அதிகாரிகளின் குறைவான கவனமே பெறப்பட்டது.

ஐ,பி.கே.எப் உயர் மட்டத்திலிருந்த அதிகாரிகளின் போக்கும் பிரதமரின் அலுவலகத்தின் முடிவின்படியே இருந்ததை ஜெனரல் ஹர்க்கிரற் சிங் அவதானித்தார். உயர்மட்டத்தினரால் உருவாக்கப்பட்ட பிரதான குழுவும் பிரதமரின் அலுவலகத்திற்கு ஏற்ப தாளம் போட்டது. இராணுவத்திடம் பிரிகேடியர் வி.ஆர் இராகவன் தலைமையிலான ஒரு இணை திட்டமிடல் குழு இருந்தது,ஆனால் இதுவும்கூட டிக்சிற் மற்றும் பிரதமரின் அலுவலகம் வரைந்த கோட்டையே பின் தொடர்ந்தது.

இந்தியாவை தளமாகக் கொண்ட ஐ,பி.கே.எப்பின் ஒட்டுமொத்த படைத் தளபதி (ஓ.எப்.சி) லெப்.ஜெனரல் டிப்பிந்தர் சிங் இந்த கடின தெரிவிற்கு எதிராக இருந்தார்,ஆனால் இறுதியாக அவரும் விட்டுக் கொடுத்தார். ஸ்ரீலங்காவில் இந்திய அமைதிகாக்கும் படை (திரிசூல் பிரசுரம் புது தில்லி,1992) எனும் தனது புத்தகத்தில் ஜெனரல் டிப்பிந்தர் சிங் எழுதும்போது,தான் இராணுவத் தலைவர் ஜெனரல் சுந்தர்ஜியிடம் வெறுமையான மற்றும் போதிய உபகரண இணைப்புகளற்ற படைகளைக் கொண்டு, ஒக்டோபர் மாத பருவ மழைக் காலத்தின்போது கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது பேரழிவு ஏற்படுத்தும் என எச்சரிக்கை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்காவில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஐ,பி.கே.எப் அடுத்து வரும் 20 வருட காலங்களுக்கு சிக்கிவிடும் என்று கணிப்பிட்டிருந்தார். ஆனால் ஜெனரல்.சுந்தர்ஜி ஜெனரல் டிப்பிந்தர் சிங்கை பயந்தவன் என்று வசைபாடி அதை ஒதுக்கித் தள்ளிவிட்டார்.

ஜெனரல் டிப்பிந்தர் சிங்கைப் போலவே ஸ்ரீலங்காவில் களத்திலிருந்த மேஜர் ஜெனரல் ஹர்க்கிரற் சிங் அவர்களும் படையினரின் அளவு மற்றும் கிடைக்ககூடிய உபகரணங்கள் என்பனவற்றை பார்த்து இந்த கடின தெரிவை மேற்கொள்வதைப்பற்றி ஒரு தெளிவற்ற கண்ணோட்டத்தையே கொண்டிருந்தார்.சென்னையிலோ அல்லது புது தில்லியில் உள்ளவர்களை போலல்லாது மற்ற அனைவரைக் காட்டிலும் எல்.ரீ.ரீ.ஈயின் போரிடும் திறமைபற்றி அவர் நன்றாக அறிந்திருந்தார். அவரின் கருத்து எல்.ரீ.ரீ.ஈயுடன் மோதி ஐ,பி.கே.எப் எளிதில் வெற்றிபெற முடியாது,என்பதாக இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ “மிகவும் ஊக்குவிக்கப்பட்ட,நன்கு பயிற்சி பெற்ற,நன்கு பின்னப்பட்ட போர்ப்படைகளைக் கொண்டு அவர்களின் இலட்சியமான தமிழீழத்தை அடைவதில் முற்றாக உறுதி கொண்டுள்ளது” என அவர் எழுதியுள்ளார். பெண் புலிகள் எனப்படும் பெண் அங்கத்தினர்கள் ஆண்களைப் போலவே ஆபத்தானவர்கள் மற்றும் கொலை செய்வதற்கு பயிற்றப்பட்டவர்கள், என்று அவர் சொல்கிறார்.மற்றும் புலிகள் உள்ளுர் பொதுமக்களின் ஆதரவையும் பெற்றவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ தலைவருடனான தனிப்பட்ட அறிமுகத்தை பற்றி குறிப்பிடுகையில் அவர் சொல்வது “எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனை நான் பல சந்தர்ப்பங்களில் சந்தித்திருப்பதன் அனுகூலமாக எவரது எண்ணங்களின் செயல்முறை எனக்கு பழக்கமானதாக உள்ளது. அவரது புத்தி எப்படி வேலை செய்யும் என்று எனக்குத் தெரியும். மாத்தையா, யோகி,மற்றும் அன்ரன் பாலசிங்கம் ஆகியோரையும் எனக்கு மிக நன்றாகத் தெரியும்” என்று.

பிரபாகரனைக் கொலை செய்தல்

கொழும்பு மற்றும் புது தில்லி என்பனவற்றின் இலட்சிய வேட்கை, பிரபாகரன் மற்றும் மாத்தையா ஆகியோர் அடுத்தமுறை பேச்சுவார்த்தைக்கு வரும்வேளை அவர்களை சுடும்படி டிக்சிற்றிடமிருந்து வெளிப்பட்ட அதிர்ச்சிமிக்க ஆணையில் பிரதிபலித்தது.ஆனால் துணிச்சல்மிக்க ஜெனரல் ஹர்க்கிராற் சிங் அதை செயற்படுத்த மறுத்துவிட்டார்.இந்த அங்கத்தை பற்றி தாஸ் மற்றும் குப்தா ரே எழுதுகையில்,” எல்.ரீ.ரீ.ஈயுடன் யுத்தம் வெடிப்பதற்கு முன்பே செப்ரம்பர் 14 – 15 நள்ளிரவு உயர் ஸ்தானிகர், பிரபாகரனையும் மற்றும் மாத்தையாவையும் தன்னிடம் பேச்சுவாhத்தைகளுக்கு வரும் வேளைகளில் அவர்களைச் சுட்டுத் தளளும்படி தன்னிடம் வலியுறுத்தினார் என்று ஜெனரல் ஹர்க்கிராற் சிங் கூறியதாகத். தெரிவித்துள்ளார்கள். இதைச் செய்வதற்கு 54ம் படைப்பிரிவின் பொதுக் கட்டளைத் தளபதி(ஜி.ஓ.சி) மறுத்துவிட்டார். இது சமாதான காலத்தில் நடைபெற்றது, அப்போது இந்திய - ஸ்ரீலங்கா உடனபடிக்கையின் ஷரத்துக்களை எல்.ரீ.ரீ.ஈயை ஏற்றுக் கொள்ள முயற்சிக்கவைக்கும் பணிக்கு பொறுப்பாக அவர் இருந்தார். “நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கௌரவமான இராணுவமான இந்திய இராணுவம் அந்த வழியில் செயல்படாது” என தூதுவர் டிக்சிற்றிடம் அவர் கூறினார்.

இந்த நிராகரிப்பை செய்ததற்காக அவரது மேலதிகாரியான லெப்.ஜெனரல் டிப்பிந்தர் சிங்கின் ஆதரவை அவர் பெற்றார், மேலும் இராணுவ தலைமையகத்தின் இராணுவ நடவடிக்கைகளக்கான பணிப்பாளர் நாயகம் லெப்.ஜெனரல் பி.சி.ஜோசியும் அவரை பாராட்டினார்,ஆனால,இராணுவ தலைவர் ஜெனரல் சுந்தர்ஜி அதையிட்டுவெளிப்படையாக மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை.

ஜெனரல் ஹர்க்கிராற் சிங் நம்புவது “அநேகமாக இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்தான் இந்திய அரசாங்கத்துக்கு ஐ,பி.கே.எப் தற்பொழுது ஏற்றிருக்கும் பணிக்கு முற்றிலும் தயாரற்ற நிலையிலுள்ளார்கள்,ஏனெனில் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈயுடன் விரிவான தோழமையுடன் நடந்து கொள்கிறார்கள் அதனால் ஜி.ஓ.சி 54வது காலாட்படைப் பிரிவை மாற்ற வேண்டியது அவசியம் என்கிற கடிதத்தை உயர் ஸ்தானிகர் எழுதத் தூண்டியது” என்று.

எல்.ரீ.ரீ.ஈ தளபதிகளின் கைது

ஒக்ரோபர் 2 – 3 இரவு வல்வெட்டித்துறை கடலில் வைத்து கைது செய்யப்பட்ட ஆயுதம் தாங்கிய 17 எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களையும் ஸ்ரீலங்காவின் இராணுவம் ஏற்று கொழும்புக்கு கொண்டு செல்வதை அனுமதிப்பதை ஜெனரல் ஹர்க்கிராற் சிங் எதிர்த்தார். அதேவேளை ஜெனரல் ஹர்க்கிராற் சிங் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகியோர்,; ஜனாதிபதியின் பொது மன்னிப்பு எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு வழங்கப்பட்டுள்ளதின் பின்னணியில் அந்தக் கைது தேவையற்ற ஒன்று என்றே நம்பினார்கள்.ஆனால் ஸ்ரீலங்காவின் நிறுவனங்களின் மொழிபெயர்ப்பு வேறுவிதமாக இருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு உயர்மட்ட தலைவர்கள் இருந்தார்கள்,திருகோணமலை தளபதி புலேந்திரன்,மற்றும் யாழ்ப்பாண தளபதி குமரப்பா ஆகியோரே அவர்கள்,அந்த இருவரது விதியும் எல்.ரீ.ரீ.ஈக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆனால் ஒக்டோபர் 5ல் டிக்சிற் மற்றும் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் விருப்பத்துக்கு இணங்கி ஸ்ரீலங்கா இராணுவம் அவர்களை எடுத்துச் செல்ல அனுமதித்தது. இந்தப் போராட்டத்தில் 17 அங்கத்தவர்களில் புலேந்திரன் மற்றும் குமரப்பா உட்பட 13 பேர்கள் ஏற்கனவே மாத்தையா மற்றும் பாலசிங்கம் அவர்களிடம் வழங்கியிருந்த சயனைட் வில்லைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர்.இந்த கூட்டுத் தற்கொலை எல்.ரீ.ரீ.ஈ, சிங்களவாகளை படுகொலை செய்யும் முயற்சிக்கு வழிகோலியது. இந்தச் சம்பவம் காரணமாக இந்தியா மற்றும் ஐ,பி.கே.எப் என்பன சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஆகிய இருபகுதியினராலும் கைவிடப்பட்டன.

கூட்டுச் சேவைகளிடையேயான போட்டி

ஜெனரல் டிப்பிந்தர் சிங்கின்கூற்றுப்படி,இராணுவம்,கடற்படை,மற்றும் வான்படை என்பனவற்றுக்கு இடையில் ஒருங்கிணைப்பு குறைவாக இருந்தது ஐ,பி.கே.எப்பின் பலவீனங்களில் ஒன்று. அவா இதை கூட்டுச் சேவைகளிடையே உள்ள போட்டி என்று குறிப்பிடுகிறார். அவர் தனது பணியில்; வான்படை பிரதிநிதிகளையும் மற்றும் கடற்படை பிரதிநிதிகளையும் உள்ளடக்கியிருந்தார், ஆனால் முன்னேற முடியாதபடி இறுதியில் அவர்களது பலம் குறைக்கப்பட்டது. அவரது அலவலகத்தில் ஏனைய சேவைகளின் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததினால் அவர் கட்டாயமாக தென்னக வான் மற்றும் கடற்படை தளபதிகளிடம் தேவையான வான் மற்றும் கடல் உதவிகளை கோரவேண்டியதாக இருந்தது.

ஒக்ரோபர்10ல், ஐ,பி.கே.எப் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ இடையே முழு வீச்சிலான போர் வெடித்தபோது, பிரபாகரனின் தலைமையகமான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்மீது ஒரு வான்வழி தாக்குதலை நடத்தி பிரபாகரனை கைது செய்யவோ அல்லது கொலை செய்யும்படியாகவோ ஒக்ரோபர் 12ல் ஒரு ஆணை கிடைத்தபோது,10 உப கொமாண்டோ படையினர் மற்றும் 13 சீக்கிய இலகு காலாட்படை வீரர்களை உள்ளே இறக்குவதற்காக ஒன்பது உலங்கு வானூர்திகள் தெரிவு செய்யப்;பட்டன. எனினும் ஐந்து விமானங்கள் மட்டுமே உள்ளே சென்றன,மற்றும் இவைகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அது திரும்பி வரவில்லை. அதை தொடர்ந்து வான்வழி உதவி முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டது,மற்றும் கிழக்கில் ஒரு பயிற்சி நடைபெறுவதால் விமானங்கள் எதையும் தர இயலாது என்று ஜெனரல் ஹர்க்கிராற் சிங்கிடம் சொல்லப்பட்டது.

அதேவேளை பிரபாகரனை தேடும் முயற்சியில் உப கொமாண்டோக்கள் தங்கள் வழியை தவற விட்டுவிட்டார்கள், சீக்கிய காலாட்படைப் பிரிவினர் தொகையிலும் மற்றும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையிலும் குறைவாக இருந்தனர். தங்களிடம் இருந்த கடைசி ரவை வரை உபயோகித்து போராடியதில் ஆறு கொமாண்டோக்களும் 29 சீக்கியர்களும் கொல்லப்பட்டார்கள். ஐ,பி.கே.எப் இனது முதலாவது துணிச்சலான முயற்சி தோல்வியில் முடிவடைந்ததுக்கு வான்வெளி உதவி கிடைக்காதது ஒரு காரணம் மற்றும் பிரபாகரனின் இருப்பிடம் பற்றி தவறான உளவுத்துறை தகவல்கள் கிடைத்தது மற்றொரு காரணம். ஐ,பி.கே.எப்பில் போதுமானளவு தமிழ்பேசும் ஆட்கள் இல்லாதது,உளவு சேகரிப்பதில் தவறான கருத்துக்களை ஏற்படுத்துகிறது. அந்த திட்டம் சிறப்பாக திட்டமிட்டு முறையான வளங்களுடன் நடைபெற்றிருந்தால் அது ஆட்டத்தின் தன்மையை முற்றிலும் மாற்றியிருக்கும்.

தரக்குறைவான ஆயதங்கள்

போரின் ஆரம்ப கட்டங்களில் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் ஏகே 47,ஜி – 3 மற்றும் எம் - 16 போன்ற சிறந்த ஆயதங்களைப் பயன்படுத்தினார்கள், இதற்கு முரண்பாடாக இந்தியத் துருப்புகள் தாக்கம் குறைவான 7.62 மி;மீ சுயமாக ஏற்றும் துப்பாக்கி (எஸ்எல்.ஆர்) போன்றவற்றையே பயன்படுத்தினார்கள். இது போட்டியை சமமற்றதாக ஆக்கியதுடன் இந்திய போர்வீரர்களிடத்தில் ஆழமான பயத்தையும் ஊற்றெடுக்கச் செய்தது. அச்சமின்றி இருப்பதற்காக அவர்கள் மிகப் பெரிய குழுவாக நகருவதால்,கண்ணிவெடி தாக்குதல்களின்போது மிகப் பெரிய இழப்புகளினால் இடர்படவும் நேர்ந்தது. ஆனால் முறையாக வழி நடத்தப்பட்டபோது அவர்களிடம் மன உறுதி உண்டானது. போர் நீண்டபோது ஐ,பி.கே.எப் உலங்கு வானூர்தி துப்பாக்கிகள் மற்றும் வலிமையான சுடுகலன்கள் என்பனவற்றை பயன்படுத்தினார்கள், அது எல்.ரீ.ரீ.ஈயினரை வன்னிக் காடுகளின் மறைவிடங்களுக்கு துரத்தியடித்தது.ஆனால் கெரில்லா தாக்குதல்கள், கண்ணிவெடிகள்,மற்றும் குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள் என்பன தொடர்ந்தும் இந்தியாகளின் உயிரைக் குடித்து வந்தன.

இரட்டைப் பாதை கொள்கை

இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஒரு இரட்டைப் பாதை கொள்கையினைக் கடைப்பிடித்து வந்தது. இந்திய உளவுப் பிரிவான ரோ எல்.ரீ.ரீ.ஈ யினரோடு நட்பாக இருக்கும்போதே எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான குழுக்களோடு உறவுகளை ஏற்படுத்தி வருவதாக 1987 செப்ரம்பரில் எல்.ரீ.ரீ.ஈ குற்றச்சாட்டை எழுப்பியிருந்தது. எல்.ரீ.ரீ.ஈக்கும் ரோவிற்கும் சென்னையில் நடைபெற்ற இரகசியப் பேச்சு வார்த்தைகள் ஐ,பி.கே.எப்பின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்ததாக தாஸ் மற்றும் குப்தா ரே குற்றம் சாட்டுகிறார்கள்.ஆனால் முன்னாள் அமைச்சரவை செயலாளர் பி.ஜி. தேஷ்முக் ‘ஒரு அமைச்சரவை செயலாளர் திரும்பிப் பார்க்கிறார்’ (காப்பர் கொலின்ஸ்,இந்தியா,2004) எனும் தனது நூலில் இந்தியாவின் அரசியல் நிறுவனங்கள் தமது சொந்த நிர்ப்பந்தங்களின்படி செயற்படுகின்றன எனக்குறிப்பிட்டுள்ளார்.

அவரது கூற்றுப்படி ஐ,பி.கே.எப்பிற்கு கொடுக்கப்பட்ட சுருக்கமான விளக்கம், எல்.ரீ.ரீ.ஈயினை அடக்கு ஆனால் அது ஸ்ரீலங்காவின் இராணுவத்தை தனித்து எதிர்கொள்ள முடியாத அளவிற்கு கோழையாக்காதே என்பதே. எதிர்காலத்தில் அரசியல் சூழ்நிலைகள் முன்னேற்றமடையும்போது, அதன் தேவைக்கு அவசியம் ஏற்படலாம்.
அவதார்சிங் பாஷின் தனது , ஸ்ரீலங்காவில் இந்தியா : சிங்கத்துக்கும் மற்றும் புலிகளுக்கும் இடையில் (விஜித யாப்பா,கொழும்பு,2004) எனும் நூலில் ”பிரபாகரன் ஐ,பி.கே.எப்பின் கைகளிலிருந்து சரியாக மூன்றுதடவை நழுவிச் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று பரவலான ஒரு கருத்து நிலவுகிறது, என்று எழுதியிருப்பதாக தேஷ்முக், குறிப்பிட்டுள்ளார்.

அட்டூழியங்கள்

பெண்கள் சிறுவர்கள் உட்படபொதுமக்களை கவசமாக பயன்படுத்தி , ஐ,பி.கே.எப் வீரர்கள் அடிக்கடி கொலை செய்தல்,போன்றவை அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு வழி நடத்துகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களான ராஜன் ஹ_ல்,தயா சோமசுந்தரம், கே. சிறீதரன் மற்றும் ரஜனி திரணகம போன்றவர்கள் கற்பழிப்பு, கொள்ளை,கடத்தல் மற்றும் ஒழுக்க கேடான அழிவுகள் மற்றும் கொலைகள் போன்றவற்றை அவர்களின் புத்தகமான உடைந்த பனையில் பதிவு செயதுள்ளார்கள் ( ஸ்ரீலங்கா கற்கை நிறுவனம், கிளார்மவன்ட் ,கலிபோர்ணியா, 1988)

22 ஒக்ரோபர்1987;ல் யாழ்ப்பாண வைத்தியசாலையில் நடைபெற்ற ஒழுக்க கேடான கொலைகள் பற்றிய சம்பவத்தில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது,வைத்திய சாலைக்குள்ளிருந்து எல்.ரீ.ரீ.ஈதான் முதலில் துப்பாக்கிசூடு நடத்தியது,ஆனால் அதைச் செய்தவிட்டு அவர்கள் தப்பியோடி விட்டார்கள். ஐ,பி.கே.எப் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியபோதும் அதற்கு எதிரான துப்பாக்கிச்சூடு இடம்பெறவில்லை.
ஐ,பி.கே.எப் அதிகாரிகளின் கூற்றுப்படி படைவீரர்கள் கண்மூடித்தனமாக சுடும் போக்கு முளைவிடுவதற்கு காரணம் அவர்களிடம் ஏற்பட்ட பயமும் அதேபோல கோபமுமே காரணம் என்று. அச்சமானது சாதாரணமாக நண்பனையும் மற்றும் எதிரியையும்,கெரில்லாவிலிருந்து பொது மகனையும் வேறுபடுத்தி அறிய முடியாத இயலாமை காரணமாக ஏற்படுகிறது,ஏனெனில் கெரில்லாக்கள் எப்போதும் சிவில் உடையிலேயே உள்ளனர். சில விடயங்களில் மக்களை எல்.ரீ.ரீ.ஈ யுடன் துணைபோகாதவாறு அச்சப்படுத்தி எல்.ரீ.ரீ.ஈயினை அவர்கள் வெறுக்கும்படி செய்வதற்கு வன்முறை ஒரு வழிமுறையாக பயன்படுகிறது.

அட்டூழியங்களைப் பற்றி ஐ,பி.கே.எப் அதிகாரிகளிடம் மக்கள் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள், ஆனால் உடைந்த பனையின்படி அதிகாரிகள் ஆதாரங்களை துருவி ஆராய்வதில் நாட்டமின்றி குற்றவாளிகளை குற்றத்திலிருந்து விடுவித்து விடுகிறார்கள.; “அதைத்தான் இராணுவம் என்றால் இராணுவம்தான் மற்றம் இராணுவத்தினர் என்றால் மோசமாகத்தான் நடப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாங்கள் இந்தியாவிடமிருந்து சிறப்பான ஒன்றை எதிர்பார்க்கிறோம்” என்று எழுத்தாளார்கள் சொல்கிறார்கள.

பரிகாரம் செய்தல்

போரின் புழுதி மண்டலம் 1988ல் அடங்கியபோது இந்திய வீரர்கள் மனிதாபிமானிகளாக மாறினார்கள். பொதுமக்களின் இதயங்களையும் மனங்களையும் வெல்ல முழுமனதோடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் யாழ்ப்பாணத்தவர்களின் பதில் மந்தமாகவே இருந்தது. நட்பு என்பது வெறுமே ஒரு விளக்கின் ஆழியைப்போல வேண்டும்போது ஏற்றவும் மற்றும் அணைக்கவும் கூடிய ஒன்றல்ல என்று அதற்கு உடைந்த பனை கருத்து தெரிவிக்கிறது

சிலோன் ரூடே

மொழிபெயர்ப்பு: எ ஸ்.குமார்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல