புதன், 10 அக்டோபர், 2012

ஒஸ்ரேலியா கனவில் இருந்த 31பேர் வவுனியாவில் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக முயற்சித்த 31பேரை வவுனியாவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செயப்பட்ட இவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் சிலாபம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மன்னார், சிலாவத்துறை பிரதேசத்துக்குச் சென்று அங்கிருந்து படகு மூலம் செல்ல திட்டமிட்டிருந்த இவர்கள் பயணித்த பஸ்ஸை பொலிஸார் சோதனையிட்டதை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
 கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் கைக்குழந்தையொன்றும் அடங்குவதாகத் தெரிவித்த பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல