புதன், 10 அக்டோபர், 2012

பேஸ்புக்கில் யாரும் லைக் செய்தால் உங்களை உண்மையில் அரவணைக்கும் ஜக்கெட் கண்டுபிடிப்பு

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளுக்கு நண்பர்கள் கொடுக்கும் 'Like' க்கு உண்மையாகவே உங்களை அரவணைத்து கொள்ளும் புதிய ஜக்கெட்டுக்களை அறிமுகம் செய்துள்ளார் ஒரு அமெரிக்க வடிவமைப்பாளர்.

MIT மாணவரான மெலிசா சோவ் என்பவர் உருவாக்கியுள்ள இந்த ஜக்கெட்டை உங்களது பேஸ்புக் கணக்குடன் இணைத்துவிட்டால் சரி. அதன் பின்னர் உடுத்திக்கொள்வது மட்டும் தான்.

எப்போதெல்லாம் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டேடஸ் பதிவுகளுக்கு லைக் விழுகிறதோ அப்போதெல்லாம தானாக உங்களை அணைத்துக்கொள்கிறது. உங்களுக்கு இந்த லைக்ஸ் அனுப்பியவருக்கு நீங்களும் திருப்பி அனுப்பலாம். இந்த ஜாக்கெட்டை மீண்டும் அழுத்தி காற்றை விடுவிப்பதன் மூலம் இப்படி செய்யலாம்.

இணைப்பில்லா தொடர்பு மூலம் வரும் லைக்ஸ்களை எவ்வாறு உணர்ச்சிகரமாக்குவது எனும் எண்ணப்பாட்டின் கீழ் பரிசோதனை முயற்சியாக இதனை மேற்கொண்டதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல