வியாழன், 4 அக்டோபர், 2012

தமிழ் டெக்ஸ்ட்டைப் படித்துக்காட்ட ஒரு இணையம்

தமிழில் சிறிய வாக்கியங்களை அமைத்தால், அதனைப் படித்துக் காட்டும்
பயன்பாட்டு தளம் ஒன்று பெங்களூரில் உள்ளது. பின் வரும் லிங்கிற்கு
http://mile.ee.iisc.ernet.in/tts சென்று அங்கு காட்டப்பட்டுள்ள கட்டத்தில், தமிழ்
யூனிகோட் எழுத்துக்களில், சிறிய வரிகளை டைப் செய்து என்டர் தட்டவும்.

அடுத்து, இன்னொரு தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப் படுவீர்கள். அங்கு
உள்ள லிங்க்கில் கிளிக் செய்தால், நீங்க டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படித்துக்
காட்டக் கூடிய சவுண்ட் பைல் கிடைக்கும்.

அதனைக் கிளிக் செய்தால், டெக்ஸ்ட் படித்துக் காட்டப்படும். இதில் ஒரு சில
சொற்களில் மட்டுமே தவறான ஒலி கிடைக்கிறது. பெரிய வாக்கியங்களாக
இல்லாமல், சிறிய வாக்கியங்கள் மிக அழகாக படிக்கப்படுகின்றன.

இந்த துறையில் இது குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதால், மேலும் பல
வசதிகளைச் சிறப்பாகத் தரும் அப்ளிகேஷன்களை வருங்காலத்தில்
உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல