வியாழன், 4 அக்டோபர், 2012

உங்களுக்குத் தெரியுமா!

* இன்டர்நெட்டில் அதிகம் பயன் படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மன், ஜப்பானீஸ், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஸ்வேதிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், டச், நார்வேஜியன், பின்னிஷ், செக், ரஷ்யன் மற்றும் மலாய் ஆகியவை வருகின்றன.

* பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும்.

* வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்து கிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

* ஒரு சிடியில் எழுதப்படும் டேட்டாவின் அளவு பொதுவாக நிமிடங்களில் தான் கூறப்படுகிறது. 74 நிமிடங்கள் என்பது ஏறத்தாழ 650 மெகா பைட்ஸ். 63 நிமிடம் என்பது 550 மெகா பைட்ஸ்

* ஈதர்நெட் (Ethernet) என்பது ஸெராக்ஸ் நிறுவனத்தின் ட்ரேட் மார்க். அதே போல யூனிக்ஸ் என்பது AT-T நிறுவனத்தின் ட்ரேட் மார்க்.

* ஏதேனும் புரோகிராம் அல்லது பைலுக்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் இடம் பெறுமாறு செய்திடலாம். இதற்கு டெஸ்க் டாப்பில் உள்ள அந்த ஷார்ட் கட் ஐகானை மவுஸால் இழுத்து வந்து ஸ்டார்ட் பட்டனில் விட்டுவிடவும். இனி ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து பார்த்து அந்த ஷார்ட் கட் மெனுவில் உள்ளதை உறுதி செய்திடவும். இதனை எப்படி நீக்கலாம். அதுவும் மிகவும் எளிதே. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, எந்த புரோகிராமினை அந்த பட்டியலில் இருந்து மட்டும் நீக்க வேண்டுமோ, அதன் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Remove from this list என்று இருக்கும் பிரிவில் கிளிக் செய்துவிட்டால் அது நீக்கப்படும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல