திங்கள், 8 அக்டோபர், 2012

பிரபல பாடகி ஆஷா போஸ்லே மகள் தற்கொலை

இந்தி திரைப்பட பிரபல பாடகி ஆஷா போஸ்லேயின் மகள் வர்ஷா போஸ்லே, இன்று பிற்பகல் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிகிறது.

இந்தி படவுலகின் பாப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான, புகழ் பெற்ற பாப் பாடகி ஆஷா போஸ்லே. இவரது மகள் வர்ஷா போஸ்லே, இன்று பிற்பகல் மும்பையில் உள்ள தமது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டுள்ளார். உரிமம் பெற்ற தமது துப்பாக்கியால் தாமே தலையில் சுட்டுக் கொண்டு உயிர் விட்டுள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரிடம் விவாகரத்துப் பெற்று இப்போது தனியாக வாழ்ந்து வரும் இவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்ததாகத் தெரிகிறது. அப்போது அவரைக் காப்பாற்ற உடனிருந்த தாய் ஆஷா போஸ்லே இப்போது, சிங்கப்பூரில் உள்ளார்.

அங்கு ஒரு கலாச்சார விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ள ஆஷா போஸ்லே, திரும்பி வந்த பின்னர்தான் அவரது மகளின் தற்கொலைக்கான காரணம் தெரியும் என கூறப்படுகிறது. ஆஷா போஸ்லே, பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி என்பதும், இருவருமே தமிழ் திரைப்படங்களிலும் பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தற்கொலை செய்து கொண்ட வர்ஷா போஸ்லேவும், பாப் பாடகி என்பதும், நல்ல எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல