திங்கள், 8 அக்டோபர், 2012

ஜேர்மன் பொலிஸார் இளைஞர் ஒருவரை ஈவிரக்கம் இன்றி தாக்கும் காணொளி

ஜேர்மன் தலைநகர் பேர்லினில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவரை காவல்துறையினர் சுட்டு காயப்படுத்தியதுடன் அவரை மிக மோசமாக தாக்கிய காட்சிகளை பில்ட் ரிவி என்ற தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஜேர்மன் காவல்துறையினரின் இந்த ஈவிரக்கமற்ற தாக்குதலை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். மனித உரிமை மீறல் குற்றத்தை புரிந்த காவல்துறையினர் மீது விசாரணை நடத்தி அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அலெக்சாண்டர்பிளட்ஸ் பகுதியில் நிலக்கீழ் தொடரூந்து நிலைய வாயிலில் வைத்து 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் சுடப்பட்டுள்ளார். காவல்துறையினர் அந்த இளைஞரை தாக்குவதையும் நாயை அவர் மீது ஏவிவிடுவதையும் அவரை சுடுவதையும் ஊடகவியலாளர் ஒருவர் அவர்களுக்கு தெரியாமல் படம்பிடித்துள்ளார். போலிஸ் நாய் அந்த இளைஞரை கடிப்பதை பார்த்து பொலிஸார் ரசித்துக்கொண்டு நின்றனர் என அதை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி குண்டு அந்த இளைஞரது இடுப்பு பகுதியை துளைத்து சென்றுள்ள நிலையில் அவரது நிலை மிகவும் கவலைக்கிடாக உள்ளதாக பேர்லின் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல