அனைத்துலக தொடர்பகத்தின் பிரித்தானியா கிளையின் பொறுப்பாளர் என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் தனம் என்பவர் இலங்கைத் தீவில் நடந்து முடிந்ததாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் போரின் போது தமிழீழ தேசியத் தலைவருடன் 16 .05. 2009 ம் திகதி வரை நேரடித் தொடர்பில் இருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் தலைவர் அவர்கள் தன்னுடன் முக்கியமான "இரகசியங்கள் பலவற்றையும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் எதிர்கால செயற்பாடுகள் எப்படி அமையவேண்டும் யார் அதனை முன்னெடுக்கவேண்டும் எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பன போன்ற விடையங்கள் தொடர்பாகவும் தெரிவித்துள்ளதாகவும் சரியான சந்தர்ப்பங்கள் வரும்போது அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு" தலைவர் பிரபாகரன் அவர்கள் இறுதியாக 16 .05. 2009 அன்று தன்னுடன் உரையாடும்பொழுது தெரிவித்தார் என்று கடந்த ஒருசில மாதங்களாக சில இரகசிய சந்திப்புக்களில் தெரிவித்து வருகிறார்.
கடந்த மாதம் பிரித்தானியாவில் வாழும் முக்கிய செல்வந்தர்களான தனது கதையைக் கேட்கக் கூடிய பிரதான வர்த்தகர்கள் 60 முதல் 75 வரையானவர்களை மிகவும் இரகசியமாக சந்தித்த தனம் அவர்கள், அந்த சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் மாவீரர் நாள் வணக்க எழுச்சி நிகழ்வினை இம்முறை தாம் பிரித்தானியாவின் மிகப்பெரும் மண்டபம் ஒன்றில் நடத்தப் போவதாகவும், அந்த நிகழ்வின் போது தான் இறுதியாக தமிழீழ தேசியத் தலைவருடன் உரையாடிய விடையங்கள் மற்றும் முக்கியமான இரகசியங்கள் பலவற்றையும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் எதிர்கால செயற்பாடுகள் எப்படி அமையவேண்டும், யார் அதனை முன்னெடுக்கவேண்டும், எப்படி முன்னெடுக்க வேண்டும், என்பன போன்ற விடையங்கள் அனைத்தையும் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் அரங்கில் மக்கள் முன் தோன்றி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 16 .05. 2009 அன்று தன்னைத் தொடர்புகொண்டு தனக்கு தெரிவித்த தகவங்கள் அனைத்தையும் மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாகவும் அந்த சந்திப்பின் போது மேலும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களை பிளவுபடுத்தும் நபர்கள் தொடர்பாகவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தன்னிடம் தெரிவித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாகவும், அதன் காரணமாக தாம் நடத்தப்போகும் மாவீரர் நாள் நிகழ்வின் செலவுக்கான நிதிப் பங்களிப்பை தாராளமாக வழங்கி தம்மை பலப்படுத்துமாறு வர்த்தகர்களிடம் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் திரு.ட்டுத்.தனம் அவர்கள்.
இவர்களின் இப்படியான புரளி வித்தைகள் ஒன்றும் புதிய விடையமும் இல்லை, ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை காரணம் என்னவெனில் கடந்த வருடமும் இதே போன்றுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான திரு ச.பொட்டு அம்மான் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய அமரர்.ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மகனான டேவிட் அவர்களின் ஊடாக தனம் உள்ளிட்ட சிலருடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு மாவீரர் நாள் நிகழ்வினை யார் செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும், என்பது தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார்.
திரு ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறியதன் காரணமாகத் தான் கடந்த வருடம் எச்செல் மண்டபத்தில் நடைபெறவிருந்த மாவீரர் நாள் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டு 6 இடங்களில் தனம் கமல் மகேஷ் தலைமையிலான கிளையினரால் நடத்தப்பட்டது. அப்படி நடத்தப்பட்ட நிகழ்வில் உண்மைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொண்ட மக்கள் உண்மையான, உன்னதமான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் மாவீரர் நாள் நிகழ்வினை ஒழுங்குபடுத்திய தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் பின்னால் அணிதிரண்டு முருகதாசன் நினைவுத் திடலில் அலையெனத் திரண்டுவந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி அந்த உன்னதங்களை வணங்கிச் சென்றனர்.
கடந்த வருடம் பொட்டம்மானின் தொலைபேசித் துணையுடன் வந்த கிளையினர் இம்முறையும் அதே போன்று கொஞ்சம் மாற்றத்துடன் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டமிடல்களுக்கு ஏற்றவாறுதான் தாம் செயற்படுவதாக கூறிக்கொண்டு இரகசிய தகவல்களுடன் நவம்பர் 27 இல் மேடையேற வருகிறார்கள் திரு.ட்டுத்.தனம் அவர்கள்.
வழமையாக பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்திவந்த தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் கடந்தவருடம் ஈகைப் பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் தாயகத்தில் நடப்பது போன்ற உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. அதேபோன்ற வகையில் தான் இம்முறையும் பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வு நடத்தப்பட வேண்டும் என்பதை ஏராளமான மக்கள் விரும்புகின்றனர், அதே வேளை மிகப்பெரும் பணச் செலவில் எச்செல் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பணம் தின்னும் மனித உருவங்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிகழ்வினை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்ந்த சிலர் திருடர்கள் போல பதுங்கித் திரிவதாகவும் அவர்கள் நிதி சேகரிக்க வரும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும், எச்செல் மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடக்குமாக இருந்தால் அங்கு தாம் தீக்குளித்து மரணிக்கப்போவதாகவும் சில உணர்வாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
சுத்துமாத்துக்களும் பம்மாத்துக்களும் பொய்யும் புரட்டுமாக தமிழ்மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் இந்தக் கூட்டத்தை எத்தனை ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும் இந்த ஈனப்பிறவிகளை திருத்தமுடியாது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! இல்லை என்று நீ பிரிந்து நின்றால் உனக்கில்லை வா££?????
உண்மையுள்ள உன்தமிழ் இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக