தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் இறுதி யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஃபாரா -3 கப்பலின் புகைப்படங்கள் இவை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கரைய முள்ளிவாய்க்காலில் இருந்து கடல் எல்லையை நோக்கி 500 மீற்றர் தூரம் செல்கின்றபோது இக்கப்பலை இன்று காணலாம்.
இது ஜோர்தான் நாட்டுச் சரக்குக் கப்பல். இது தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி அரிசியுடன் பயணித்துக் கொண்டு இருந்தபோது இயந்திர கோளாறு காரணமாக 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முல்லைத்தீவுக் கரையில் தரித்து நிறுத்தப்பட்டது. இதை கடல் புலிகள் கைப்பற்றினார்கள். மாலுமிகளை பணயக் கைதிகளாக பிடித்தனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் முயற்சிகளை அடுத்து மாலுமிகள் விடுவிக்கப்பட்டார்கள்.
ஆயினும் கப்பலை புலிகள் திருப்பிக் கொடுக்கவே இல்லை. இதில் கொண்டு வரப்பட்ட 14000 மெட்ரி தொன் அரிசியையும் கையகப்படுத்திக் கொண்டனர். கப்பலின் பாகங்கள் பலவற்றையும் கழற்றி எடுத்து இலகு ரக வாகனங்கள், பங்கர்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இறுதி யுத்தத்தின்போது கடல் புலிகளின் தாக்குதல்கள் இக்கப்பலில் இருந்துதான் மேற்கொள்ளப்பட்டன. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இக்கப்பலை 2009 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவு கைப்பற்றியது.
முல்லைத்தீவுக்கு வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தவறாமல் பார்த்துச் செல்கின்ற யுத்த கால ஞாபகப் பொருட்களில் ஒன்றாக இது தற்போது உள்ளது.

.jpg)
.jpg)
.jpg)

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக