திங்கள், 19 நவம்பர், 2012

எப்போதுதான் உணரப்போகிறீர்கள் ஈழத்தமிழ்ர்களே...?






 


தமிழகத்திலிருந்து தோழர் சன்னா அவர்கள் பொதுவெளியில் புலம்பெயர் தமிழர்களை நோக்கி எழுப்பும் கேள்விகளும், போட்டுடைக்கும் உண்மைகளும்.
 
புலம் பெயர்ந்தத் தமிழர்களே.......
- சன்னா.

உலகில் நீங்கள் மட்டும்தான் ஒடுக்கப்பட்டவர்களா.. உங்களை ஆதரித்த பாவத்திற்காக உங்களை ஆதரிக்கும் சாதி இந்துக்கள் தருமபுரியில் செய்த வெறியாட்டத்தை பாருங்கள்..

கொள்ளை, தீ வைப்பு ஈழமண்ணில் மட்டும் நடக்கவில்லை, தமிழகத்திலும் நடப்பதைப் பாருங்கள். இதை நடத்துபவர்கள் சிங்களவர்கள் இல்லை. ராசபட்சேக்கள் இல்லை.. உங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்க்கும் சாதித் தமிழர்கள். இவர்களைத் தான் இத்தனைக் காலம் நீங்கள் நம்பி ஏமார்ந்திருக்கிறீர்கள். நம்பிக்கை துரோகிகள். கபட வேடதாரிகள்.

ஈழ விடுதலையைப் பேசி தலித்துகளை அடிமைப் படுத்துபவர்கள். சமுக நீதிபேசி சேரிகளை கொளுத்துபவர்கள். உலகத்தின் முன் தமிழ் முகத்தைக் காட்டி தலித்துகளிடம் கோர முகத்தை காட்டுபர்கள். இவர்களை இன்னும் நம்பிக் கொண்டிருப்பீர்களா?

சேரித் தமிழனை ஒடுக்கும் சாதித் தமிழனின் ஆதரவு உங்களுக்கு கிடைக்குமா? நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் லாயக்கற்ற இவர்களை நம்பி நீங்கள் சாதிக்கப்போவது என்ன?

சிங்களவர்களிடம் இந்தியா கொடுத்த ஆயுதங்கள் இவர்களிடம் கிடைத்தால் தலித்துகளை என்ன செய்திருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

வெறும் பெட்ரோலை வைத்து ஒட்டுமொத்தச் சேரியை கொளுத்தி தரை மட்டம் ஆக்கியவர்களுக்கு கையெறி குண்டுகளும், எறிகணைகளும், கண்ணிவெடிகளும், துவக்குகளும் கிடைத்தால் என்ன செய்திருப்பார்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

தமிழகத்தில் காவல்துறை கண்டுபிடிக்கும் பயங்கர ஆயுதங்கள் வீச்சரிவாளும் கத்திகளும் தடிகளும்தான். இதை வைத்தே இத்தனை கொடுரங்களை அரங்கேற்றுபவர்கள் நவீன ஆயுதங்கள் கிடைத்தால் எப்படி மகிழ்வார்கள் என்பதை கற்பனை செய்துப் பாருங்கள்.

தன்னந்தனியாய் நிற்கும் அம்பேத்கர் சிலைகளை வியூகம் அமைத்து தாக்கும் வீரம் படைத்தவர்கள் சாதி தமிழர்கள். நிராயுதபாணியாக நிற்கும் தலித்துகளிடமும் குழந்தைகளிடமும் வீரத்தைக் காட்ட படை நடத்தத் துடிப்பவர்கள்.

உங்களுக்குத் தெரியுமா வெறும் 60 வீடுகள் உள்ள அண்ணா நகரின் சேரி மீது 1000 வன்னியர்கள் படையெடுத்தார்கள் என்று.. சிங்களவன்கூட அப்படி நடந்திருக்க மாட்டான்..

வீட்டில் சமையல் செய்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் முதிவர்களை மொத்தமாய் 2000பேர் போய் தாக்கினார்கள். என்றால் இவர்களின் வீரத்தை உங்களால் மெச்ச முடியுமா?

நேற்றுவரை பள்ளியில் உடன் படித்த மாணவர்கள் அந்த 2000 பேருடன் சேர்ந்து வருவதைப் பார்த்த சக சேரி மாணவ மாணவியர் அன்போடு அவர்களை அழைத்தபோது பழகிய பாசத்தைக்கூட மறந்து அந்த சிறுவர்கள் நடத்திய வெறியாட்டத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. அந்த பிஞ்சுகளின் மனது என்ன பாடுபட்டிருக்கும்.. நாளை அவர்களை பள்ளியில் எப்படி எதிர் கொள்ளுவார்கள் அந்த பிஞ்சுக் குழந்தைகள்.

போர்களம்தான் போரளிகளை அடையாளம் காட்டும். தமிழகத்தில் அது துரோகிகளை, கயவர்களை, போலிகளை, சாதி வெறியர்களை அடையாளம் காட்டும்.

உங்களின் குரலாய் கர்சனைச் செய்யும் அத்தனை புலி வீரம்பேசும் தமிழகத் தலைவர்களும் ஊமையாய், தேரையாய், வாய்முடி மொனமாய் இருக்கும் அதிசயத்தை உங்களால் காண முடிகிறதா?

ஈழ ஒடுக்குமுறைக்கு ஒரு குரல், ஒரு நீதி பற்றி வாய் கிழிய பேசுவார்கள்.. தமிழகத்தில் நடக்கும் ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசுங்கள் என்று கேட்டால் திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல அமைதியாய் இருக்கிறார்கள்.. ஏன் என்று உங்களால் கேட்க முடியுமா?

போலிகளை நம்பி நீங்கள் ஏமாறலாம் ஏனெனில் கடல்கடந்து வாழ்கிறீர்கள், உங்களுக்கு இவர்கள் கொடுக்கும் தகவல்கள்தான் உண்மைபோலத் தெரியும். ஆனால் எங்களுக்கு இவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். இவர்களின் ரத்தத்தைப் பற்றி நன்றாகத் தெரியும், இவர்களின் நாக்கைப் பற்றி நன்றாகத் தெரியும். இரண்டாயிரம் ஆண்டுகளாக இவர்களோடுதான் வாழ்ந்து வருகிறோம்.. நெருக்கமும் அதிகம், வலிகளும் அதிகம்.

எச்சரிக்கைச் செய்கிறோம். முகநுலில் நல்ல முகத்தைக் காட்டுவார்கள். தமிழ்த் தளங்களின் தமிழ்த் தேசியம் பேசுவார்கள், தமிழக மண்ணில் மட்டும் அதை நடவே மாட்டார்கள். வேரில் வெந்நீரை ஊற்றுவார்கள். இதுதான் சாதி இந்துக்கள். உங்களால் நம்ப முடியுமா.. இவர்களை?

எச்சரிக்கைச் செய்வது எமது கடமை இதை ஏற்றுக் கொள்வதும் உங்கள் கடமை. ஒடுக்கப்பட்ட வனுக்குத்தான் வலிகளும் வஞ்ககங்களும் புரியும் அந்த அனுபவத்தில், உரிமையில் உங்களிடம் சொல்கிறோம்.

இவர்களை ஒடுக்க நீங்கள் மனித வெடி குண்டாக மாறக் கோரவில்லை உங்கள் மனசாட்சியை திறக்கக் கோருகிறார்கள் தருமபுரியில் பாதிக்கப் பட்ட தலித்துகள்.. உங்களிடம் மனசாட்சி இருக்கிறதா..?

சாதி வெறியர்களை உலக நாடுகளின் முன்பு உங்களால் அம்பலப் படுத்த முடியுமா..?

http://www.piraththiyaal.com/2012/11/blog-post_2433.html


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல