திங்கள், 26 நவம்பர், 2012

‘துப்பாக்கி’ விவகாரம் : வெளியேறும் முஸ்லீம் நிர்வாகிகள், உடைகிறது விஜய் நற்பணி இயக்கம்!

‘துப்பாக்கி’ படத்துக்கு எதிராக முஸ்லீம்களின் போராட்டம் தீவிரமடைந்து
வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்யின் நற்பணி
இயக்கத்திலிருக்கும் முஸ்லீம் நிர்வாகிகள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக
வெளியேற முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

விஜய் நடித்து தீபாவளிக்கு ரிலீஸான ’துப்பாக்கி’ படத்தில் முஸ்லீம்கள்
எல்லோரும் தீவிரவாதிகள், அவர்கள் தான் நாட்டில் நடக்கும் எல்லா தீவிரவாத செயல்களையும் செய்து வருகிறார்கள் என்று அப்பட்டமாக
காட்சிப்படுத்தியிருந்தார் அந்தப் படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அந்தப் படத்தில் நடித்த விஜய்யும் ஒரு ராணுவ வீரனாக வந்து முஸ்லீஸ்
தீவிரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்கும் ஹீரோவாக நடித்தார்.
இதனால் படத்தை பார்த்த முஸ்லீம்கள் கொதித்துப் போய் விட்டார்கள். அதன்
எதிரொலியாக ஹீரோ விஜய் வீட்டு முன்பு முஸ்லீம் அமைப்பினர் ஒன்று
திரண்டு அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால் விஜய் மற்றும்
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு
அளிக்கப்பட்டது.

ஆனால் ‘துப்பாக்கி’ படத்திலிருந்து சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளை
நீக்கும்படி முஸ்லீம் அமைப்பினர் தொடர்ந்து பல வடிவத்தில் போராட்டம்
நடத்தியதால் மிரண்டு போன தயாரிப்பாளர் தாணுவும், விஜய்யின் அப்பா
எஸ்.ஏ.சந்திரசேகரும் “சம்பந்தப்பட்ட சீன்கள் படத்திலிருந்து நீக்கப்படும்” என்று சொன்னார்கள்.

ஆனால் சும்மா பெயரளவுக்கு ஒரு பத்து, இருபது தியேட்டர்களில் மட்டுமே
சர்ச்சைக்குரிய சீன்களை கட் பண்ணியிருக்கிறார்களாம் மற்றபடி எல்லா
தியேட்டர்களிலும் சீன்கள் ‘கட்’டாகமல் தான் படம் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

மேலும் உலகம் முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களில் துப்பாக்கி படம்
ரிலீஸாகியிருப்பதால் இந்த ’கட்டிங்’ பண்ணும் வேலையைச் செய்வதில்
நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் வெளியில் “நாங்கள் எல்லா தியேட்டர்களிலும் சம்பந்தப்பட்ட சர்ச்சை
சீன்களை கட் பண்ணிவிட்டோம்” என்று அண்டப்புளுகு புளுகி வருகிறார்கள்
தாணுவும், எஸ்.ஏ.சியும்.இன்றும் கூட தமிழ்நாட்டிலுள்ள பல தியேட்டர்களில் ‘துப்பாக்கி’ படம் எந்தவிதமான ‘கட்’டுகளும் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பதை அறிந்த முஸ்லீம் அமைப்பினர் இப்போது வேறுவிதமாக “விஜய் அன்கோ” வுக்கு நெருக்கடிகளை
கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதில் ஒரு பகுதியாக விஜய்யின் நற்பணி இயக்கத்தில் தமிழ்நாடு முழுக்க
இருக்கும் முஸ்லீம் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் அந்த
அமைப்பிலிருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களாம்.
முஸ்லீம் நிர்வாகிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்து இப்போது
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலிருக்கும் விஜய் நற்பணி இயக்க
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இயக்கத்திலிருந்து ஒவ்வொருவராக
வெளியேறிக் கொண்டிருக்கிறார்களாம்.

அதிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விஜய் நற்பணி இயக்கத்தில் பெரும்பாலானோர் முஸ்லீம்களாகவே இருப்பதால் அவர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக வெளியேறி வருகிறார்கள்.

இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள விஜய் நற்பணி இயக்கம்
செயல்படாமல் உடைந்து போக ஆரம்பித்து விட்டதாம்.

மேலும் ” தாணுவும், எஸ்.ஏ.சியும் மட்டும் தான் மாறி மாறி மன்னிப்பு
கேட்கிறார்களே தவிர விஜய் இதுவரை எங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை,
அதுகூட வேண்டாம் அட்லிஸ்ட் தனிப்பட்ட முறையில் வருத்தமாவது
தெரிவித்திருக்கலாம் அதைக் கூடச் செய்ய அவர் முன்வராத போது அவரது
நற்பணி இயக்கத்தில் நாங்கள் தொடர்ந்தால் அந்த அல்லாவே எங்களை
மன்னிக்க மாட்டார் ” என்று கடுப்புடன் கூறி வருகிறார்கள்.

‘துப்பாக்கி’ சர்ச்சையில் சில நாட்களுக்கு முன்பு விஜய் ஒரு பிரஸ்மீட்டை
வைத்து விட்டு அதை அவசரமாக கேன்சல் செய்தது உங்களுக்கு ஞாபகம்
இருக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல