வியாழன், 22 நவம்பர், 2012

கனடா மொன்றியலில் அனலைதீவு பெண் வாகனத்துடன் எரித்து கொலை.

கனடா மொன்றியலில் அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 29 ம் திகதி (Oct 29, 2012) மொன்றியலில் வைத்து 37 வயதுடைய அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவதினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர்.

இது ஒரு கொலை, தற்கொலை (Murder-Suicide) என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கண்டெடுத்த 2 உடல்களில் ஒன்று ஆணினுடையதும், ஒரு பெண்ணினுடையதும் என்பதும், இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்பதும் ஆனால் முன் விரோதமே கொலைக்கு காரணம் என்றும் நம்பப்படுகிறது.


கனடா மிரர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல