இலங்கை முன்னாள் ராஜதந்திரிக்கு, செக்ஸ் குற்றத்துக்காக பிரிட்டனில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் தூதரான இவர், பிரிட்டனில் மஸாஜ் செய்துகொண்டிருந்த பெண்ணின் மார்பை எட்டிப்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
போலந்துக்கான இலங்கை தூதராக பணிபுரிந்த 77 வயதான டியுடர் குணசேகர, பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் குற்றவாளியாக தண்டனை பெற்றுள்ளார். குணசேகர, தனது பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார்.
வழக்கு ஆவணங்களில் இருந்து தெரியவந்த விபரத்தின்படி, பிரிட்டனின் பிரபலமான மஸாஜ் கிளப்பில், தமது தோளை மஸாஜ் செய்து கொண்டிருந்த பெண்ணின் மார்பை எட்டிப்பிடித்துள்ளார். இதனால், கலவரமடைந்த பெண், அபாயமணி பட்டனை அழுத்திவிட்டு வெளியே பாய்ந்துள்ளார்.
“மசாஸூக்கு உரிய கட்டணத்துக்கு மேலாக 50 பவுன்ட்ஸ் தந்தால் தன்னால் சிறப்புச் சேவை செய்ய முடியும் என்று அந்த பெண் கூறினார்” என்ற இவரது வாதம் நீதிமன்றில் எடுபடவில்லை.
இவருக்கு விதிக்கப்பட்ட தண்டன, அபராதமாக 1000 பவுன்ட்ஸ், மசாஜ் பெண்ணுக்கு நஷ்டஈடாக 1000 பவுன்ட்ஸ், வழக்கு நடத்திய அரச செலவாக 1250 பவுன்ட்ஸ் என, மொத்தம் 3250 பவுன்ட்ஸ் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் எதிர்தரப்பின் வழக்கு செலவுக்கான கட்டணமாக 4170 பவுன்ட்ஸ் தொகையையும் இவரே செலுத்த வேண்டும்.
பிடித்ததுதான் பிடித்தார், ரொம்ப எக்ஸ்பென்சிவ்வாக எட்டிப் பிடித்திருக்கிறார்!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக