கனடாவை ஆளும் பழமைக் கட்சி அரசாங்கம் குடியேற்றக் கொள்கைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது வரைக் காலமும் அகதிகளை பெருமளவில் ஏற்று வந்த கனடா அரசு இனி வருங்காலங்களில் கல்விமான்களை அதிகம் குடியேற்ற விரும்புகின்றது.
கடந்த சில ஆண்டுகளில் கனடாவை நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருகைத் தர ஆரம்பித்துள்ளார்கள். கனடா என்றுமே அயலவர்களை ஏற்றுக்கொள்வதில் முனைப்புக் காடு ஒரு தேசமாகும். அத்தோடு உலக நாடுகளை ஒப்பிடும் போது குறைந்த கல்விக் கட்டணம், வாழ்க்கை செலவு, விரைவான நிரந்தர வதிவுரிமை விசாக்கள், வேலை வாய்ப்பு போன்றக் காரணங்களால் இந்தியா சீனா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து பலர் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்டில் கனடாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் கணிப்பீட்டில் முதல் மூன்று இடங்களையும் ஆசிய நாடுகளே பிடித்துள்ளன. சீனாவிலிருந்து 56,900 மாணவர்களும் தென்கொரியாவிலிருந்து 24,615 மாணவர்களும் இந்தியாவிலிருந்து 17,530 மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர். .
கனடாவில் மூன்றாண்டு கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கு மேலும் மூன்றாண்டு பணி விசா தரப்படுகின்றது. அந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்ற துறையில் பணி செய்தால், நிரந்த வதிவுரிமைக்கான விசா விண்ணப்பம் செய்யலாம். ஆகையால் இங்கு குடியேறுவதற்கு இவ்வழி உகந்ததாக உள்ளது. அது மட்டுமில்லாமல் பல இந்திய மாணவர்கள் ஒண்டாரியோவை விடவும் மிக வேகமாக வளர்ந்து வரும் சாஸ்கட்ச்சேவான் மாநிலத்தை விரும்புகின்றனர். கல்வி கற்ற பின்னர் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையைப் பெறவும், எளிமையாக நிரந்த வதிவுரிமைக்கான அட்டையைப் பெறவும் சாஸ்கட்ச்சேவான் மாநில அரசு உதவி வருகின்றது.
டொரோண்டோவில் பெரும்பாலான சீன இந்திய மாணவர்கள் கைக்காசுக்காக குறைந்த சம்பளத்திலேயே பகுதி நேர வேலை செய்கின்றனர். ஆனால் சாஸ்கட்ச்சேவானில் நல்ல சம்பளத்துடன் கூடிய பகுதி நேர வேலைக் கிடைப்பதாக பல மாணவர்கள் கூறுகின்றனர்.
ஒண்டாரியோ, பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்துக்கு வரும் மாணவர்கள் வாரத்திற்கு 20 மணிநேரம் மட்டும் பகுதி நேர வேலை செய்யலாம்.ஆனால் விடுமுறைக் காலங்களில் முழு நேர வேலை செய்யலாம். அதனால் பல மாணவர்கள் உணவகங்கள், கடைகள், கம்பெனிகளில் கைக்காசுக்கு வேலை செய்கின்றனர். அவர்களுக்கு அதற்கு மிகவும் குறைவான சம்பளங்களே கிடைக்கின்றன. ஆனால் கனடாவின் சராசரி குறைந்தபட்ச சம்பளம் 10டாலர்கள் ஆகும்.
இங்கு வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் வெற்றிகரமாக நிரந்தர வதிவுரிமை அட்டைகளைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல்லிண மக்கள் வாழும் கனடாவில் தமது எதிர்காலத்தை ஏற்படுத்தி கொள்ள வெளிநாட்டவருக்கு விருப்பம் இருப்பதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை.
இனவெறி மிகவும் குறைவு, இலவச மருத்துவமனைகள், இலவச பள்ளிக் கல்வி, குழந்தை வளர்ப்புக்கு கூடுதல் நிதி, பல்லிண மக்கள் வாழும் நாடு, புதிய வாய்ப்புகள் நிறைந்த நாடு, இடப் பற்றாக்குறை இல்லை, மக்கள் தொகை மிகவும் குறைவு, வன்முறை மிகவும் குறைவு, சமய சாதி பேதமற்ற மதச்சார்ப்பில்லாத நாடு, நல்ல மக்கள், சிதைவில்லாத மந்தமற்ற பொருளாதார நிலை, பெண்களுக்கு பாதுக்காப்பு அதிகம் போன்ற பல்வேறுக் காரணங்களால் இந்தியா, சீனா, பிலிப்பைன் போன்ற நாடுகளில் இருந்து பல மாணவர்கள் கனடாவுக்கு ஆண்டு தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் தென்னிந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து திறமைமிக்க பல மாணவர்கள் இங்கு வருவது குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் கனடா குறித்த போதிய தகவல்கள், விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
அதே போல் ஈழத் தமிழ் மாணவர்களும் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் அளவு மிகக் குறைவாகவே இருக்கின்றது. நிறையப் பணத்தை முகவர்களிடம் கொடுத்து அபாயகரமான பாதைகளில் பயணம் செய்வதை விட இது மிகவும் சிறந்ததோர் வழியாகும். இதுபற்றி மேலும் தகவல் அறிய வேண்டுமாயின் நீங்கள் செல்ல வேண்டிய வலைத்தளங்கள் கீழே.
http://www.cic.gc.ca/english/study/index.asp
http://oncampus.macleans.ca/education/tag/foreign-students/
நன்றி: இக்பால் செல்வன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக