செவ்வாய், 20 நவம்பர், 2012

‘காட்சிகளை வெட்டியதாக ‘சீன்’ போட்டு, இஸ்லாமியர்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் தாணு!’

‘துப்பாக்கி’ படத்தில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கியதாக சொல்வது சுத்தமோசடி. தயாரிப்பாளர் தாணுவும் இயக்குனர் முருகதாஸும் எங்களை முட்டாள்கள் என்று நினைத்து முகத்தில் கரியைப் பூசுகின்றனர்’ என்று இந்திய தேசிய லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் ரகீம் கொதிக்கிறார்.

கடந்த 14 ஆம் தேதி ’துப்பாக்கி’ பட குழுவினர் உள்துறை செயலாளரை சந்தித்து அப்படத்தில் அவர்கள் கூறிய சில ஆட்சேபகரமான காட்சிகளை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர் நேற்று திரையரங்கிற்கு சென்று ‘துப்பாக்கி’ படத்தை பார்த்தனர். ஆனால் ’துப்பாக்கி’ படக் குழுவினர் கூறியது போல் எந்த காட்சிகளையும் நீக்கவில்லை எனவும் அதற்கு மாறாக சில இடங்களில் வசனங்களை சத்தம் கேட்காமல் செய்து தங்களது கோரிக்கையை ஏமாற்றி விட்டார்கள் என்றும் அவர்கள் கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் உள் துறை செயலாளரை சந்தித்து நாங்கள் அறிவித்திருந்தபடி காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை. மேலும் முஸ்லீம்களின் மனம் புண்படும் படி நடந்து கொண்டார்கள். இதனால் ’துப்பாக்கி’ படத்தை தடை செய்ய வெண்டும் என்றும், தங்கள் குறிப்பிட்டுள்ள காட்சிகளை நீக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சி தெரிவித்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல